வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கர்நாடக தமிழக பேருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தம்

busesநக்கீரன் இசக்கி :  ;காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு! காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க இருக்கிறார். காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
 அதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒசூர், சத்தியமங்கலம் பகுதயில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழகதத்தை சேர்ந்த 11 அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சந்தர்பத்தை பயண்படுத்தி கர்நாடகா மாநிலத்திற்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக