திங்கள், 26 பிப்ரவரி, 2018

அட்டப்பாடி மதுவுக்காக கேரளம் .. இங்கே தலித்துக்கள் கொலை .... மௌனம் ?

Bhim Prabha Gandhi : கேரளத்தில் பசிக்கு திருடியதாக அடித்தது கொல்லப்பட்ட மதுவிற்காக பினராயி விஜயன் களத்தில் இறங்குகிறார். 16 நபர்களை உடனே கைது செய்கின்றனர்.
மம்மூட்டி "சகோதரன் மது" விற்கு நடந்த அநீதி என்று வருத்தம் தெரிவிக்கிறார். நீதி கேட்டு மக்கள் தெருவில் இறங்கி போராடுகின்றனர்.
முதலமைச்சர் மது குடும்பத்துக்கு பத்து லட்சம் அறிவிக்கிறார். வளர்ந்த மாநிலம் என்று சொல்வதில் வெக்கப்படுகிறோம் என்கின்றனர்.
இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடக்கிறது. அந்த சமூகம் தன்னைத் தானே செய்து கொண்ட சுய விமர்சனம்.
ஆனால், தமிழ் நாட்டில்...
ஒரே நாளில் பினராயி விஜயன் மதுவை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். ஒரு வருடம் ஆகியும் இங்கே தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் இந்து முன்னணியை சேர்ந்த வன்னியர் மீது எந்நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த விதவை தாய், 4ஆம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் லதா என்ற சிறுமிக்கு நடந்த கொடூரத்தை Just like that கடந்து போய்விடுகிறோம்.

எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ அல்லது ஸ்டாலினோ, வேறு எந்த திராவிட அரசியல் தலைவரோ, நடிகரோ, இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. எதிர்வினை ஆற்றவில்லை.
சாதி பேசுபவனை விட அந்தக் கொண்டையை மறைத்து, சுயசாதி அட்டூழியங்களை கூட எதிர்க்காத முற்போக்கு பேசுபவர்கள் தான் இந்தச்சமூகத்தில் அதிகம். அவர்கள் தான் இந்த சமூகத்தின் முதல் விரோதிகள்.
இந்த நிலைமைக்கு நீயும் நானுமே காரணம். வெட்கப்படுங்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக