சனி, 24 பிப்ரவரி, 2018

விழுப்புரம் ..தலித் ..தாயும் சிறுவனும் படுகொலை .. சிறுமி பாலியல் வல்லுறவு .. வன்னிய ஜாதி வெறி ..

Thiyaga Rajan : தலித் சிறுவனும் தாயும் படுகொலை. சிறுமி வல்லுறவு.சாதிவெறியின் கொடூரம் குற்றவாளிகள் பாமாகவினர் என கூறப்படு கின்றது.குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ததாக தகவல் இல்லை.
விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தின் மீது, ஒரு பதினான்கு சென்ட் இடப்பிரச்சனையின் காரணமாக, தமது சாதிய வெறித்தனைத் தைக் காட்டியிருக்கிறது சாதீய கும்பல். அந்த தலித் குடும்பத்தின் விதவைத் தாய், மற்றும் அவருடைய எட்டு வயது மகனையும் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த சாதிவெறிக் கும்பல், அவருடைய 14 வயது மகளை கூட்டு வல்லுறவு செய்துள்ளது.
ஆதிக் சாதி வெறியின் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்தபடியே இருக்கிறது. அந்த சாதியில் பிறந்து, தங்களை வழிகாட்டிகளா கவும் தலைவர்களாவும் காட்டிக் கொண்டவர் களும் அந்த சாதிவெறி நெருப்பையே வளர்த் தெடுத்திருக்கிறார்கள். கடும் வெறியூட்டப் பட்ட அந்த சாதியினரின் சாதிவெறியை, மென்மையான, அடையாளப் போராட்டங்க ளாலால் கட்டுப்படுத்த முடியாது.
தீவிர எதிர்ப்பரசியல் தேவை.



;T M Puratchi Mani a வன்னிய சாதி வெறியின் கோர முகம்..
விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தின் மீது, ஒரு பதினான்கு சென்ட் இடப்பிரச்சனையின் காரணமாக எட்டு வயது தலித் சிறுவனும், அவனின் விதவைத்தாயும் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் அக்குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வன்னிய சாதிவெறியர்களால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். தலித் மக்களை கீழ்சாதிகளாக நிறுவுவதன் மூலமே தன்னை ஆண்ட சாதிகளாக நிலைநாட்டத்துடிக்கும் இடைச்சாதிகளின் வன்முறை வெறியாட்டங்களை அந்தந்த சாதித்தலைவர்கள் வார்த்தெடுக்கும் அவலச்சூழலில் வன்முறையை அறிவார்ந்த கொள்கைகளால் மட்டும் நிறுத்திவிட முடியாது என்பதையே எதிரிகள் மீண்டும் மீண்டும் உணர்த்தியுள்ளார்கள்.. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.. அதற்கான அழுத்தத்தை தலித் சமூகத்தின் பேரெழுச்சிமிக்க எதிர்வினைகளும், போராட்டங்களும்தான் ஏற்ப்படுத்த முடியும்.. குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்து துக்கிலேற்றுவதுடன், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக