வியாழன், 15 பிப்ரவரி, 2018

முன்னாள் எம் எல் ஏ கொலை ! வேடஞ்சத்தூர் அதிமுக ... நடைபயிற்சியின் போது வெட்டி..

mlaநக்கீரன் :திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் சட்டமன்ற முன்னால் அதிமுக உறுப்பினர் ஆண்டிவேல்.  இவர் எரியோடு அருகே உள்ள புதூரில் குடியிருந்து வருகிறார். இவரது தோட்டம்  தண்ணீயர் பந்தல் பட்டியில் உள்ளது. தனது தோட்டத்துக்கு தினசரி மாலையில் வாங்கிங் போய் வருவது வழக்கம்.  அதுபோல் இன்று மாலை வாங்கிங் போய்இருக்கிறார்.  அப்போழுது அவர் தோட்டத்திற்கு அருகே இருக்கும் பக்கத்து தோட்டக்கார் வெகு நேரம் ஆகியும் ஆண்டிவேலை காணவில்லை என்பதால் அவரை தேடி தோட்டத்திற்கு போய் பார்த்து இருக்கிறார். அப்போழுது ஆண்டிவேல் தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூம் அருகே மர்மாக தாவங் கோட்டையில் வெட்டு பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தரார். உடனே அவர் போலீஸ்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று முன்னால் எம்எல் ஏ உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதைகேள்வி பட்ட எஸ்.பி.சக்திவேல் ஸ்பாட்டுக்கு சென்று விசாரனை செய்து வருகிறார். அதோடு இந்த ஆண்டிவேல் ஏற்கனவே ஈம கோழி வியாபாரம் செய்து இருக்கிறார். அதன் முன் விரோதமாக இந்த கொலை நடந்ததா?    அல்லது தற்கொலை செய்து கொண்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அதோடு தீடிரென ஒரு முன்னால் எம்.எல்.ஏ . பலியானது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

        - சக்தி
Read More Only at Nakkheeran.in: http://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/magic-mla-clamped-during-walking

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக