வியாழன், 1 பிப்ரவரி, 2018

உத்தரப்பிரதேச காஸ்கஞ்ச் வன்முறை சங்பரிவார் RSS வெறியாட்டம் வீடியோ


Chinniah Kasi : - தீக்கதிர் தலையங்கம் உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் வன்முறை சங்பரிவார் அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. மக்கள் எப்போதெல்லாம் துன்பப்படுகிறார்களோ, அப்போது மக்களின் கோபம்ஆட்சியாளர்களின் பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்ள மதவெறி ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகிறது பாஜக. இந்தியாவில் சட்டத்தின்ஆட்சி நடைபெறுகிறதா, சங்பரிவாரின்தனித்த ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம்எழுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது கூட உ.பி.யில் காஸ்கஞ்ச் பகுதியில் தடையை மீறி ஏபிவிபி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் சென்று பல ரவுண்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டு ரகளை செய்திருக்கின்றது. அதற்கானவீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
மேலும் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களை ஆத்திரப்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். அதன் பின்னரே வன்முறை உருவாகியிருக்கிறது. உடனே ராகுல் உபாத்யாய் என்ற இந்து இளைஞரை கொன்று விட்டதாக வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தில் வன்முறை உக்கிரமடைந்திருக்கிறது. இதுகுறித்து அப்பகுதியின் காவல்கண்காணிப்பாளர் சுனில்குமார் சிங், இது அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான் உடனே சுனில் குமார் சிங்கை யோகி ஆதித்யநாத் அரசுமீரட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்திற்கு தூக்கியடிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் எந்தஇந்து இளைஞர் உயிரிழந்ததாக வதந்தியைபரப்பினார்களோ, அவருக்கே அந்த செய்திசமூகவலைத்தளம் மூலம் சென்று சேர்ந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்தஅவர் ஊடகங்களிடம் தான் அந்த பக்கமேசெல்லவில்லை என்றும் திட்டமிட்டு வதந்தியைபரப்பி வன்முறையைஏவிவிட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மதவெறியர்களிடம் ஆட்சி அதிகாரம் சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பதற்கு ஏற்கனவே குஜராத் உதாரணமாக இருக்கிறது. அதே மாதிரியைத்தான் தற்போது உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுகிறார் அவர் முதல்வராக பதவியேற்ற முதல் 70 நாட்களில் 60 மதக்கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 151 பேர் கை கால்களை இழந்து இருக்கின்றனர்என மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. காஸ்கஞ்ச் வன்முறையில் வதந்தியை பரப்பியவர்கள் மீதோ, துப்பாக்கிகளுடன் வலம் வந்தவர்கள் மீதோ அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக