சனி, 17 பிப்ரவரி, 2018

கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ குடும்பத்துடன் இந்தியா வந்தார்

maalaimalar :கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ தனது குடும்பத்துடன் ஒருவார அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். புதுடெல்லி: இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்தும் விதமாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ ஒருவார அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார்.
அவரை இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள், கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. மேலும், கனடா - இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கிலும், டெல்லியில் நடைபெறவுள்ள மாற்றத்துக்கான இளைஞர்கள் கருத்தரங்கிலும் உரையாற்றுகிறார்.


இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் ஆக்ராவின் தாஜ்மஹால், அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் மற்றும் காந்தி நகரின் அக்‌ஷர்தாம் ஆலயம், மும்பையில் பிரபல தொழிலதிபர்கள், இந்திய திரையுலக பிரபலங்களை சந்திக்கிறார். பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், டெல்லி ஜும்மா மசூதியையும் பார்வையிடுகிறா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக