சனி, 24 பிப்ரவரி, 2018

ஆழியாறு தண்ணீர் கேட்டு கேரளாவில் போராட்டம்! கேரளா வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

தினமலர் :வறட்சி காரணமாக, போதிய நீர் இருப்பு இல்லாததால், இது போல், மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியிலும், கேரளா செல்லும் வாகனங்கள் வரிசையாக நிறுத்த பட்டு இருந்தன. தமிழக - கேரள எல்லை யில்,இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாசனத்துக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனாலும், கேரளாவின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது. 'கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறையாக வழங்க வேண்டும்' என, சில அரசியல் கட்சியினர், நேற்று முன்தினம் இரவு முதல், திடீர்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற, ஐந்து லாரிகள் சேதப்படுத்தப்பட்டன.மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை வந்த தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
அதே போன்று, தமிழகத்தில் கேரளா பதிவு எண் கொண்ட  வாகனங்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 பேரை போலீசார் கைது செய்தனர். கோபாலபுரம் வழியாக, கேரளா சென்ற சரக்கு வாகனங்களை, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு நல்லுார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே, போலீசார் தடுத்து நிறுத்தினர்.


எதிர் போராட்டம்:போராட்டம் நடத்திய அமைப்பினர் கூறுகையில், 'வறட்சியான கால கட்டத்தில், குடிநீர் தேவைக்கு மட்டும் ஆழியாறு அணையில் தண்ணீர் உள்ளது. கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென, ஆளும் இடதுசாரி கூட்டணி, எம்.எல்.ஏ., கிருஷ்ணன்குட்டி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து செல்லும் சரக்கு வாகனங்களை தடுத்து, திருப்பி அனுப்பு கின்றனர். அவரது செயலுக்கு எதிர்ப்பை காட்ட, கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்புகிறோம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக