செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

முன்னாள் புலிகள் இலங்கை ராணுவத்தில்

தினமலர் :கொழும்பு: அண்டை நாடான இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, 11 பேர் உட்பட, 50 பேர், ராணுவத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர், 2009ல், முடிவுக்கு வந்தது. அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, 11 ஆயிரம் பேர், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான தொழில் பயிற்சிகளுடன், ஆங்கில மொழி பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் விடுதலைப் புலிகளில், 11 பேர் உட்பட, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, 50 பேர், இலங்கை ராணுவத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர், சுமித் அட்டபட்டு கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும், ராணுவத்தின், விவசாய பணியில் ஈடுபடுத்தப்படுவர். ராணுவ சீருடை அணியாத இவர்களுக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கப்படும். வரும் காலத்தில், அதிகளவில் தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக