திங்கள், 5 பிப்ரவரி, 2018

பிகார் .திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தல்


மாலைமலர் :பாட்னா: பீகார் மாநிலத்தில் திருமணத்திற்க்காக இளைஞர்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. பீகாரில் பா.ஜ., கூட்டணியுடன் நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தில் கட்டாய திருமணத்திற்காக கடந்த ஆண்டில் மட்டும் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கறிஇருப்பதாவது: மாநிலத்தில் பகாடுவா எனற கட்டாய திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தப்படுவது குறித்து தினமும் குறைந்தபட்சம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது எனவும், கடத்தப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் 2,526, 2015-ல் 3 ஆயிரம் பேர், 2016-ல் 3070 பேரும், 2017-ல் 3,400 பேர்களும் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 மாநிலத்தின் கோஷி பகுதியை சேர்ந்த மகேந்தர் யாதவ் என்பவர் கூறுகையில், மாநிலத்தில் இத்தகைய நிலைமை அசாதாரணமானது அல்ல எனவும், இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானது என கூறி உள்ளார். தொடர்ந்து திருமணம் அதிகமாக நடைபெறும் மாதங்களில் இது போன்ற கடத்தல் சம்பவங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக