ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நடிகை கௌதமி :கமல் மீது குற்றச்சாட்டு ,,, தரவேண்டிய சம்பளம் பாக்கி ... அவரது அரசியல ஆதரிக்கவில்லை

ஆலஞ்சியார் : தசாவதாரம் விஸ்வரூபம் படத்தில் ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றியதற்கான நிலவை தொகையை கமல் தரவில்லை..
..கமலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அரசியலை நான் ஆதரிக்கவில்லை கௌதமி..
 

இதற்கு உடனே எச் ராசா சர்மா
well said sister என டுவிட் செய்திருக்கிறார்..
..
அவர்களின் சொந்த விவகாரங்களில் நாம் ஏன் தலையிட வேண்டுமென ராசா சர்மாவிற்கு தெரியவில்லை மாறாக அதை அரசியலாக்குகிறார்.. கமலின் அரசியல் பயணத்தை எங்கிருந்து வடிவமைக்கபட்டதென எல்லோருக்கும் தெரியும் கௌதமி பிரதமரை சந்தித்த போதே அதற்கான தொடக்கம் குறிக்கபட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள் .. தொடக்கத்தில் கௌதமியோடிருந்த நெருக்கம் அவரது சொந்த விடயம் ஆனால் அவர்களின் ஒப்பந்த முறிவுக்கு கௌதமி சொன்ன காரணம் கவனத்திற்குரியது .. தன் மகளின் எதிர்காலம் கருதி விலகுகிறேன் என்றார்..


..
கமலிடமிருந்து பிரிந்து வந்தபோது அவர் மீது நிலவை தொகை தரவேண்டுமென குற்றசாட்டவில்லை மாறாக அவரின் ரசிகையாக தொடர்ந்திருப்பேன் என்றவர்.. மய்யத்தில் தனக்கு உயர்மட்ட வாய்ப்பு வழங்கபடாததால் கமல் மீது குற்றம் சுமத்துவதாக சொல்லபடுகிறது.. படத்திற்கான நிலவை தொகை தராது குறித்து கௌதமி வெளியில் சொன்னபிறகும் கமல் வாய் திறக்கவில்லை..
தனிமனித ஒழுக்கம் அரசியலில் மிக கவனமாக கவனிக்கபடும் .. அது கமல் எனும் நடிகரிடம் எப்போதுமிருந்ததில்லை.. வெளிப்படையாகவே அவரது லீலைகள் தொடர்ந்து விமர்சிக்கபட்டிருக்கிறது .. இன்று கூட கௌதமியின் வெளியேற்றம் குறித்து சில பதிவுகளில் அவரின் மகளின் பாதுகாப்பு குறித்த கவலையில் தான் பிரிந்தாரென கருத்துகள் வருகிறது.. இதுபோல முன்பும் ..திருமதி சந்தியா ஜெயராம் பற்றியும் வந்ததுண்டு அதன் பின் கடைசியில் மகளை இழந்துநின்றாரென்றும் .. தான் அடையமுடியாத கதாநாயகி அந்தஸ்த்தை மகள் அடைய விட்டுகொடுத்ததாகவும் செய்திகள் வந்தன.. இங்கே கமலின் தனிப்பட்ட செயல்களை விமர்சிப்பது நமது நோக்கமல்ல என்றாலும் தொடர்ந்து வரும் குற்றசாட்டுகளுக்கு பொதுவாழ்விற்கு வந்த பிறகு பேசபடுவது குறுத்து கமல் பதில் தரவேண்டும்..
..
சினிமா ரகசியங்கள் பலவற்றில் பல்வேறு வதந்திகளும் பொய்களும் கலந்து வரும் நிழல் உலகம் அது.. நிழலை நிஜமெனும் நம்பும் ரசிகனினை ஒருவித மாய மயக்கத்திலேயே வைத்திருக்க கையாளப்படும் உக்தி .. உண்மையில் பொய்யை கலந்து ரசிகனின் ரசனையை மட்டமாக வைத்திருந்தாலே .. அதில் கொஞ்சம் கவர்ச்சியையும்.. செக்ஸ் கலந்த கிளுகிளுப்போடு கூடிய வதந்திகளை பரவவிட்டாலே நட்சத்திரங்களின் வாழ்வு நீடிக்கும் .. அது தான் சினிமா..அதே உக்தியை அரசியலிலும் முன்னெடுக்கிறார்கள் .. கமலின் கடந்த கால லீலைகள் நமக்கு ஏதற்கு.. அவரின் அரசியல் பிரவேசம் எந்த புள்ளியில் தொடங்குகிறதோ அதிலிருந்தே நமது விமர்சனமும் எதிர்ப்பும் இருக்கும்.. கௌதமியின் பழைய பாக்கியை பற்றி நமக்கு தெரியவேண்டிய அவசியமில்லை .. கமல் தேவைப்பட்டால் பாஜகவோடு கூட்டணி என்கிறார்.. அவர்கள் தேவையே அதுதானே .. எதற்காக உருவாக்கபட்டாரோ அதற்காக தானே அவர் இயங்க முடியும்..
..
வெளிப்படையாக அறிவித்துவிட்டு பாஜகவின் ஆதரவில் நிற்கட்டும்.. அதுதான் நேர்மையும் கூட வேசத்தை திரையோடு வைத்துக்கொள்ளுங்கள் ..
..
Aalanci Spm
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக