செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

உயர்நீதிமன்றம் உத்தரவு :மீனாட்சி அம்மன் கோயில் தீ இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை

Special Correspondent FB Wing :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தின் தற்போது நிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அபுல் கலாம் ஆசாத் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், கிழக்கு ராஜ கோபுரம் அருகே, ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் 86க்கும் மேற்பட்ட கடை இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு 10 மணிக்கு மேல் தீ விபத்து ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் சிலர் வந்தபோது, தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பு போலீசாரிடம் கூறினர்.

பின்னர் திடீர்நகர் தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேற்கு கோபுரம் முன் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீ விபத்து நடந்த பகுதியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பாக அரசுக்கு அவர் இடைக்கால அறிக் கை ஒன்றை அனுப்பினார். அதில் அவர் "
கோயிலில் மிகக் குறுகிய இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் உபகரணங்கள் இல்லை. பக்தர்களிடம் கெடுபிடி காட்டும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்ட நிலையில் பஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் இந்து சமய அறநிலையத்துறை பிடியில் இருந்து கோவிலை மீட்க வேண்டும் என்று கோரிய நிலையில் ஆட்சியாளர் அல்ல ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்ட நிலையில் பஜக பொது செயலளார் ராஜாஷர்மா மற்றும் ஹிந்து அமைப்புகள் முயற்சிகள் பிசுபிசுத்து போனதாக சமுக வலைதலத்திலே பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக