செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

உள்ளாட்சி தேர்தல் தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது... சின்னமும் கிடையாது

Veera Kumar P -  Oneindia Tamil தினகரன் அணி ஒரு அரசியல் கட்சியே இல்லை...தேர்தல் ஆணையம் அதிரடி- வீடியோ டெல்லி: தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க உத்தரவிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் இறந்தார். இதன் பின், பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து சென்றது. அந்த அணிக்கு அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்றும், சசிகலா-எடப்பாடி-தினகரன் அடங்கிய அணியை, அ.திமு.க. அம்மா அணி என்றும் அழைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தினகரன் அணியில் இருந்த தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பெரும்பாலானோர், பன்னீர் செல்வம் அணியை தங்களுடன் இணைத்துக்கொண்டு தினகரனை விட்டு பிரிந்தனர்.;இதன்பிறகு தேர்தல் ஆணையமும், உண்மையான அ.தி.மு.க. என்பது பன்னீர்செல்வம்-எடப்பாடி அணிதான் என தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கே அளித்தது.
இதை எதிர்த்து, தினகரன் தரப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன், வெற்றி பெற்றார். 
 இதனிடையே, டெல்லி ஹைகோர்ட்டில் தினகரன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாந, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் பயன்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று தினகரன் கோரியிருந்தார். 
 இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, இந்திய தேர்தல் ஆணையம், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு, நோட்டீஸ்ஸ அனுப்பியது. மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் பதில் தாக்கல் செய்தது.
 உள்ளாட்சி தேர்தல் தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது.
 தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால் எங்களுக்கு அதிகாரம் இல்லை. தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால், குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக