வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

எல்லா கட்சிகளின் தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகிறது ... எடப்பாடி உட்பட

மின்னம்பலம் :நம் செய்திக்குள் செல்வதற்கு முன்னோட்டமாக ஒரு டெல்லி செய்தி. ‘நாடு முழுதும் அச்சம் நிரம்பிய சூழலே நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேசியப் புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஏதோ தீவிரவாதிகள் போல கண்காணிக்கிறீர்கள். தொழிலதிபர்கள் பலர் எங்களிடம் போனில் பேசுவதற்குக்கூட அச்சப்படுகிறார்கள். எங்கள் போன்கள் டேப் செய்யப்படுவதால் எங்களுடன் பேசுவதன் மூலம் தங்களுக்கும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
நான் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளைக் கண்காணிக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினோமோ அதையே இப்போது இந்த அரசு எங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன தீவிரவாதிகளா? ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற அச்ச உணர்வுகள் நல்லதுக்கு இல்லை.
கருத்துச் சுதந்திரம், வணிகம் செய்ய சுதந்திரம், சமூகத்தில் கலந்துரையாடுவதற்கான சுதந்திரம்தான் இப்போதைய தேவை’’ - நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி இப்படிப் பேசினார் குலாம்நபி ஆசாத். இதை மின்னம்பலத்திலும் வெளியிட்டிருந்தோம்.
குலாம் நபி ஆசாத் சொன்னது போல மத்திய அரசின் உளவுத் துறை நாடு முழுவதும் முக்கியமானவர்களின் போன்களை டேப் செய்ய ஆரம்பித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் தமிழகத் தலைவர்களும் தப்பவில்லை என்கிறார்கள். இது சம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் உள்ள உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
‘மத்திய அரசு உளவுத் துறை மூலமாக இங்கே இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரது போன்களை டேப் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பிறகு கோட்டையில் உள்ள முதல்வரது போனும்கூட டேப் ஆகிறது என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. முதல்வர் மட்டுமல்லாமல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அலுவலகத்தில் உள்ள போனும்கூட டேப் செய்யப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பே போன் டேப் ஆகும் விவரம் முதல்வருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், ‘கோட்டைக்குள் ரெய்டு நடத்துறவங்க போனை டேப் செய்ய மாட்டாங்களா என்ன? எனக்கு இதெல்லாம் முன்பே தெரியும். நான் போனில் யாரிடமும் எந்த விவரமும் கேட்கிறதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் போன் பேசுறதையே குறைச்சுகிட்டேன்..’ என்று சொல்லியிருக்கிறார். அலுவலக ரீதியான தகவல்களைத் தாண்டி எந்த விஷயத்தையும் போனில் பேசுவதை முதல்வர் தவிர்த்துவிட்டாராம். சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் போன் செய்தபோதுகூட, ‘முதல்வர் பிசியாக இருக்காரு...’ என்று சொல்லித் தவிர்த்ததற்குக் காரணமே, ரெக்கார்டு ஆவதுதான்!
எந்த விவரமாக இருந்தாலும், முதல்வர், ஆத்தூர் இளங்கோவனிடம் சொல்லி, அவர் மூலமாகவேதான் தகவலைப் பரிமாறுகிறாராம். சாதாரண கட்சி விவகாரங்கள், தினசரி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல் தொடர்புகள், நலம் விசாரிப்புகள் தவிர வேறு எதையும் அவர் போனில் பேசுவதில்லை. ஆக, மத்திய அரசு போனை டேப் செய்ய ஆரம்பித்திருப்பதை முதல்வர் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதைத்தான் இதெல்லாம் காட்டுகிறது.
இன்னொரு பக்கம் பன்னீர் அதைவிட உஷாராக இருக்கிறார். அவருடைய செல்லுக்கு எப்போது போன் செய்தாலும், அவரது உதவியாளர் எடுத்து, ‘அண்ணன் பூஜையில் இருக்காரு...’ என்றுதான் சொல்கிறார். தனது உதவியாளரின் போன் மூலம் வாட்ஸ் அப் காலில் மட்டும் சில விஷயங்களைப் பேசுகிறாராம் பன்னீர்.
இவர்கள் இருவர் மட்டுமல்ல... டிடிவி தினகரன் போனும் டேப் ஆகிக் கொண்டேதான் இருக்கிறது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு மூவ்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பிஜேபி இப்படியான ஒரு வேலையில் இறங்கியிருக்கிறது. ஆதாரங்கள் இல்லாமல் இதை வெளிப்படையாகப் பேச முடியாது என்பதால், போன் பேச்சுக்களை அதிமுக தரப்பில் தவிர்த்துவருகிறார்கள்’ என்று சொன்னார்கள்’’ என்று அந்த மெசேஜ் முடிந்தது. அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக்.
“மாவட்ட வாரியாக நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். எல்லோரிடமும் பேசுகிறார். யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் சொல்லலாம் என்று அந்தக் கூட்டத்தில் குறை தீர்க்கும் பெட்டி வைத்துப் புகார்களையும் போடச் சொல்லியிருக்கிறார். புகார்ப் பெட்டியில் ஆரம்பத்தில் குவிந்த அளவுக்கு இப்போது புகார்கள் இல்லை. நாளுக்கு நாள் படிப்படியாக அது குறைய ஆரம்பித்துவிட்டதாம்.
காரணம், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், கூட்டத்துக்குப் போகும் முன்பே கீழ்மட்ட நிர்வாகிகளைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தி வெய்ட்டாக ஒரு கவரையும் கொடுத்து, ‘எதுவாக இருந்தாலும் நாமே பேசித் தீர்த்துக்கலாம். தலைமைக்கெல்லாம் போய் புகார் சொல்லாதீங்க...’ என டீல் முடித்து விட்டார்களாம். இந்த கரன்சி ஆய்வுக்குப் பிறகு கள ஆய்வில் புகார் சொல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்” எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக