சனி, 17 பிப்ரவரி, 2018

BBC :மெக்ஸிகோவில் 7.2 அவிலான கடும் நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்


மெக்ஸிகோவில் 7.2 அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு மெக்ஸிகோவில் வஹாக்கா மாநிலத்தில் ஒயாசகா நகரத்திற்கு அருகில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மெக்ஸிகோவில் ஆட்டம் கண்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் வஹாக்கா மாநிலத்தின் பினோடெபா டி டென் லுஸ் நகருக்கு அருகில் 24.6 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
வஹாக்கா மாநிலத்தில் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், மெக்ஸிகோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களைவிட்டு வெளியேறுவதை காணக்கூடியதாக இருந்தது.
மெக்ஸிகோ நகரம் உள்பட 5 மாநிலங்களில் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக