செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பள்ளி - கல்லூரிகளில் ஆண் - பெண் இருபாலரும் அகர வரிசைப்படி (Alphabetical order) நடைமுறைப்படுத்து!

Kaattaaru : உடைப்போம் சமையலறைகளை! 24.12.18 - Online கருத்துக்கணிப்பு. அவசியம் பங்கேற்பீர், பரப்புவீர்!
o பள்ளி - கல்லூரிகளில் ஆண் - பெண் இருபாலரும் கலந்து அமரும் முறையை அகர வரிசைப்படி ( Alphabetical order) நடைமுறைப்படுத்து!
o JNU, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ‘இருபால் பொதுவிடுதி’ முறையை (Co - Hostels or Unisex Hostels) பள்ளி - கல்லூரிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்து!
o பள்ளி - கல்லூரி வளாகங்களில் ஆண் - பெண் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும், பழகுவதையும் தண்டிக்கும் காட்டுமிராண்டிகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளை இழுத்துமூடு. அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்!
o பள்ளிக்கல்வியிலிருந்தே பாலியலையும் ஒரு பாடமாகக் கற்பி!
o பெண்களை அலங்காரப் பொம்மைகளாக உருவாக்கும் காது குத்து விழாக்களைத் தடைசெய்!
o பெண்களை இழிவுபடுத்தும் பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடைசெய்!
o திருமணங்களில் பெண்களின் சம்மதத்தையும், பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கு! இவற்றை உறுதிப்படுத்திச் சான்று வழங்க, காவல்துறை - வழக்கறிஞர்கள் கொண்ட தனி ஆணையத்தை உருவாக்கு!


o பெண்ணின் திருமணத்திற்குப் பிறகு, கடவுளையே மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் ‘குலதெய்வ வழிபாடு’ களைத் தடைசெய்!
o சிவப்புத் தோலே முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கும் சிவப்பழகுக் க்ரீம் வணிகத்தைத் தடைசெய்!
o அலங்காரப் பண்பாட்டைத் தூண்டும் நகை வணிகம், பட்டு வணிகம், மலர் வணிகங்களைத் தடைசெய்! பட்டு நூல் உற்பத்திக்கான மல்பெரி விவசாயம், மலர் விவசாயத்தைத் தடைசெய்!
o ‘திருமணம் தேவையில்லை’ என்றும், ‘குடும்ப அமைப்பே வேண்டாம்’ என்றும் முடிவெடுத்துத் தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கு!
o திருமணங்கள் உறுதிசெய்யப்படும் போதே, அந்த மணமக்களுக்குத் ‘தனிக் குடித்தனம்’ என்பதைக் கட்டாயமாக்கு!
o திருமணத்திற்கு முன்பே கருத்தடைச் சிகிச்சை செய்பவர்களுக்கும் - பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் அரசின், கல்வி - வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கு!
o இல்லப்பராமரிப்பிலும், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சமஉழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கு!
o திருமணத்தின் பெயரால் - கணவன் என்ற உரிமையால் நடக்கும் (Marital Rape) பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றமாக்கு!
o அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரம் படைத்த தனி ஆணையம் உருவாக்கு! சொத்துரிமை வழங்காத ஆண்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பெண்களுக்குப் பகிர்ந்தளி!
o திருமணக் காலத்தில் பெற்றோரிடம், பிள்ளைகள் நகை, பணம், பொருட்கள் கேட்பதைக் கடும் குற்றமாக்கு!
o கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உள்ள Anti Sexual Harassment Cell களில் நிர்வாகம் தவிர, மனநல ஆலோசகர்கள் - காவல்துறை - மகளிர் அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக