திங்கள், 19 பிப்ரவரி, 2018

ரூ.800 கோடியோடு விக்ரம் கோதாரி தப்பி ஓடிவிட்டார் ...ரோட்டோமாக்ஸ் கம்பனி

அடுத்த ஆளும் எஸ்கேப்… ரூ.800 கோடி லோன் வாங்கிவிட்டு வெளிநாடு பறந்த விக்ரம் கோதாரி.. யார் இவர்? டெல்லி: ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார். இவர் தற்போது சுவிட்சர்லாந்து பறந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போதுதான் நீரவ் மோடி 11,360 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் சுவிட்சர்லாந்து சென்று உல்லாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த நபரும் வெளிநாடு சென்று இருப்பது அதிர்ச்சி அளிக்க வைக்கிறது.
நீரவ் மோடி சம்பவம் வெளியே வந்த அதே நாளில்தான் இவரும் உஷாராகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. லோன் ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளார்.
தற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை.


எந்தெந்த வங்கிகள் இவர் மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். அலஹாபாத் வங்கியிடம் இருந்து 352 கோடி கடன் வாங்கியுள்ளார்.
பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர் சீஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் இருந்து 485 கோடி கடன் வாங்கி இருக்கிறார். இல்லை இவர் சரியாக ஒருவருடமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தற்போது இவருடைய அலுவலகங்களும் பூட்டப்பட்டு இருக்கிறது. இவர் வீட்டுக்கு பூட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அதே நாள் நீரவ் மோடி விவகாரம் வெளியே வந்த அதே நாளில் இவர் வெளிநாடு பறந்துள்ளார். இவரும் சுவிட்சர்லாந்து பறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக