ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பாபா ராம்தேவ் 50 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் ...பிடிபட்டது

Swathi K : பாபா ராம்தேவ்: இவன் செம்மரக்கட்டை கடத்தல் வேற பண்ணுறானா??
News: 23-Feb-2018- 50 Tonnes Of Sandalwood To Be Exported To China By Patanjali Seized; Ramdev Moves Delhi HC
Grade C (தரம் குறைந்த) செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செய்ய 2015ல் அனுமதி பெற்று இருக்கிறான் இந்த போலி சாமியார். இப்போது 50 டன் (45, 359 கிலோ) Grade A & B கட்டைகளை சீனா'வுக்கு கடத்த இருந்ததாக குற்றம்.. "தேசபக்தி" போர்வையில் நாட்டு வளத்தை மோடியின் உதவியுடன் இவன் சூறையாடி வருவதை முன்பே சொல்லி இருந்தேன்.
அந்த மீள் பதிவு:
பாபாவும் பாரத பிரதமரும்!! (15th Nov Post)
செய்தி - 14-Nov-2017: மகாராஷ்டிரா.. பதஞ்சலியுடன் சேர்ந்து 25,000 கோடி (இருபத்தி ஐந்து ஆயிரம் கோடிகள் - 250000000000 ரூபாய்) ரூபாய் மதிப்பில் மாடு வளர்ப்பு, பால் உற்பத்திக்கான உடன்படிக்கை. இதற்காக குந்தி (kundi), விதர்பா என்னும் பகுதியில் 800 ஏக்கர் நிலம் பதஞ்சலிக்கு இலவசமாக ஒதிக்கீடு.. (Link 2 & Pic 2)
இவன் போறபோக்க பாத்தா.. அம்பானியை அடிச்சுட்டு ஆசியாவின் முதல் பணக்காரன் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...

2013ல் 520 கோடிக்கு சொந்தமான பதஞ்சலி இன்று 85,000 கோடிக்கு சொத்து.. என்ன ஒரு அசுர வளர்ச்சி.. பதஞ்சலி CEO இன்று இந்தியாவின் 8வது பெரிய பணக்காரர்.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. அம்பானி, அதானி, பதஞ்சலி இந்த மூன்று திருட்டு பயபுள்ளைகளும் இன்னும் இரண்டு ஆண்டில் உலகத்தின் 10 பெரிய பணக்கார்கள் பட்டியலில் வருவார்கள்.. பொறுத்திருந்து பாருங்கள்.... நம்புங்கள் இந்தியா வளர்கிறது...
இதுவரை 2014லில் இருந்து பதஞ்சலிக்கு மோடி&கோ இலவசமாகவோ/ அடிமாட்டு விலைக்கோ கொடுத்த இடங்கள் கீழே. நமக்கு தெரிஞ்சு RTI மூலம் தெரிஞ்ச விவரம்... தெரியாமல் நிறைய இருக்கலாம். (Link 1 & Pic 1)
Panchkula, ஹரியானா - Jan, 2017 - 52,000 ஏக்கர்
Chirang , அசாம் - Dec , 2014 - 1200 ஏக்கர்
Balipara, அசாம் - Nov, 2016 - 148 ஏக்கர்
Nagpur, மகாராஷ்டிரா - Sep, 2016 - 234 ஏக்கர்
நொய்டா - Nov, 2016 - 300 ஏக்கர்
குந்தி (kundi), விதர்பா - Nov, 2017 - 800 ஏக்கர்
இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச சில இடங்கள்.. தெரியாமல் கண்டிப்பாக நிறைய இருக்கும்.. கிட்டத்தட்ட இந்த நாட்டை "தேசபக்தி" என்ற போர்வைக்குள் கார்பொரேட் & RSSக்கு கூறுபோட்டு வித்துக் கொண்டு இருக்கிறது இந்த அரசாங்கம்... நம்மை போன்ற நாட்டுக்கு 100% கார்பொரேட் அரசாங்கம் நல்லதல்ல.. இந்த நாடு மோசமான ஒரு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது...😢😢.
http://www.huffingtonpost.in/…/how-baba-ramdevs-business-h…/
http://indianexpress.com/…/nitin-gadkari-devendra-fadnavis…/
https://thelogicalindian.com/…/patanjali-export-50-tonnes-…/
வருத்தத்துடன்,
-சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக