திங்கள், 12 பிப்ரவரி, 2018

நடுவானில் 261 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர் .... நடுவானில் பைலட் Toilet சென்ற விபரீதம்

Near miss: How AI’s woman pilot saved lives of 261 flyers
Alwar Narayanan : போன வாரம் 7 Feb, ஏர் இந்தியா விமானமும், விஸ்தாரா விமானமும் சில நொடிகளில் மோதிக்கொள்ளும் அளவுக்கு எதிரெதிராக நெருங்கி விட்டன. மோதியிருந்தால் 261 பேர் நடுவானில் பஸ்பமாகி இருப்பார்கள். 20 வருட அனுபவம் பொதிந்த ஏர் இந்தியாவின் காப்டன் அனுபமா கோலி என்ற பெண்மணி சமயோசிதமாக விமானத்தை ஒரு நொடியில் உயர்த்தி, வலதுபக்கமாக திருப்பி பெரும் விபத்திலிருந்து காப்பாற்றி விட்டார். அவர் இயக்கிய A320ம் அருமையான விமானம். தக்க சமயத்தில் அலாரம் எழுப்பியது.
தப்பு செய்த புதிய நிறுவனமான விஸ்தாரா விமானத்தில் காப்டன் சிறுநீர் கழிக்க சென்றிருந்த சமயம் விமானத்தை நடத்தியது ஒரு கத்துக்குட்டி பெண்மணி. அச்சமயம் வான்வெளி கட்டுப்பாட்டு அறை கேட்ட கேள்விக்கு பதில் விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார். நெருக்கடியான நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
அனுபவத்துக்கு தனி ஆற்றல் உள்ளது. இந்த அனுபவமிக்க ஏர் இந்தியாவை நடுவண் அரசு தனியாருக்கு ஏறக்குறைய விற்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் முழுவதும் இத்தகைய அனுபவமிக்க மனிதர்களை காணலாம். அவர்களால்தான் இந்தியா இந்தளவு முன்னேறி வந்துள்ளளது. இப்போது நடக்கும் தவறுகளையும் தாங்கி முன்னேறி வருகிறது. இந்த நிறுவனங்களை கடந்த இரண்டாடுகளாக நடுவண் அரசு கால் தூசுபோல உதாசீனப்படுத்தி வருகிறது.

நமது கவலை அதுவல்ல.
இதே போலத்தான் கூடங்குளம் அணுமின்சார நிலையத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. திறமையாக கையாளவும் செய்யப்படுகின்றன. ஆனால் லாபத்தை மட்டுமே வைத்து அதிகமாக தனியார்மயம், உலகமயம் நடக்கும்போது கத்துக்குட்டிகள் வருவார்கள். பாய்லரை வெடிக்க வைப்பார்கள். செர்னோபில்லில் நடந்தது அதுதான். போபாலில் நடந்ததும் அதுதான்.
அண்மையில் பல இடங்களில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து உயிர்சேதம் ஏற்படுத்தி சிதறியதும் இதனால்தான். தனியார் மையத்தில் சாம்பல் அள்ளுவது குத்தகை கம்பெனிகளின் தாற்காலிக சிப்பந்திகள். அந்த பிணங்களை எண்ணமாட்டார்கள்.
அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானால், தமிழ்நாட்டுக்கு அதுவே கடைசி விபத்தாக இருக்கும். ஏனென்றால் அதற்குப்பிறகு தென்னிந்தியாவே இருக்காது.

NEW DELHI: Air traffic controllers handling the Vistara and Air India flights that came dangerously close in Mumbai airspace+ last Wednesday (Febraury 7) have been suspended. Investigators are probing if in those tense seconds — when the two planes with 261 passengers on them — had to be pulled apart, there was some confusion in the controller's coordination with the two cockpits which were both manned by women at that time.
AI's Airbus A-319 was enroute from Mumbai to Bhopal as AI 631 and Vistara's A-320 Neo was flying from Delhi to Pune as UK 997. "The planes were barely seconds away from each other. Vistara was descending from its assigned level of 29,000 feet to 27,100 feet where an AI flight was coming in the opposite direction. There may have been confusion between the ATC and Vistara cockpit — which at that time had a woman co-pilot at the controls and the captain had taken a toilet break. The AI flight had a woman commander, Captain Anupama Kohli. Maybe there was a mix-up in communication in those tense seconds like what altitude instruction is being given to which lady. This has to be seen," said sources.
https://timesofindia.indiatimes.com/india/near-miss-how-ais-woman-pilot-saved-lives-of-261-flyers/articleshow/62878010.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக