செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சர்... 177 கோடிகளுடன் முதலிடம் ( வெளிவராத பணம் இன்னும்)

முதல்-மந்திரிகளின் சொத்து மதிப்பு பட்டியல் - ரூ.177 கோடியுடன் சந்திரபாபு நாயுடு முதலிடம்
மாலைமலர் :இந்தியாவில் உள்ள
முதல்-மந்திரிகளின் சொத்து மதிப்பு பட்டியல் - ரூ.177 கோடியுடன் சந்திரபாபு நாயுடு முதலிடம் புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்-மந்திரிகளில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார். அவருக்கு ரூ.177 கோடிக்கு சொத்துகள் இருப்பது சமீபத்தில் நடந்த ஜனநாயக சீர்திருத்த கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பணக்கார முதல்-மந்திரிகளில் அருணாசல பிரதேசத்தின் பீம காண்டு 2-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.130 கோடியாகும். பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் ரூ.48.31 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது பெரிய பணக்காரராக உள்ளார்.
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ரூ.13.61 கோடி சொத்துக்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறார்.
 ஏழ்மையான முதல்-மந்திரிகள் யார்-யார் என்ற ஆய்வில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு ரூ.26 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்தான் இருக்கிறது. இவருடன் ஒப்பிடுகையில் சந்திரபாபு நாயுடு 680 மடங்கு அதிக சொத்துக்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மாணிக் சர்க்கார் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாதாரண முதல்வர்களில் 2-வது இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.30 லட்சத்துக்கே சொத்துகள் உள்ளன. மூன்றாவது இடத்தில் இருக்கும் காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபாவுக்கு ரூ.55 லட்சத்துக்கே சொத்துகள் உள்ளதாம். இந்தியாவில் காஷ்மீர் (மெகபூபா) மேற்கு வங்காளம் (மம்தா) ராஜஸ்தான் (வசந்தர ராஜே சிந்தியா) ஆகிய 3 மாநிலங்களில் பெண் முதல்-மந்திரிகள் உள்ளனர். இந்த மூவரில் வசுந்தரா பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 31 மாநில முதல்-மந்திரிகளில் மிகவும் வயதானவர் பஞ்சாப் முதல்-மந்திரி அமிரீந்தர் ஆவார். அவருக்கு 74 வயதாகிறது.

குறைந்த வயதில் முதல்- மந்திரியாக இருப்பவர்களில் அருணாசல பிரதேசத்தின் காண்டு முதல் இடத்தில் உள்ளார். காண்டுக்கு 35 வயதே ஆகிறது. ஏழை முதல்-மந்திரிகளில் 5 பேர் பா.ஜ.க.வையும், 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும் சேர்ந்தவர்களாவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக