வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காவேரி உச்ச நீதிமன்ற தீர்ப்பு காலை 10.30 மணிக்கு வெளியாகும் ,,,

Lakshmi Priya - Oneindia Tamil காவேரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பு ... பிப்.16 வெளியாக வாய்ப்பு ?
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. எனினும் 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதுபோல் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டிஎம்சி நீரில் 132 டிஎம்சியாக குறைத்து விட்டு மீதமுள்ள 60 டிஎம்சி தண்ணீரை தங்கள் மாநிலத்துக்கே தர வேண்டும் என்று கர்நாடகமும் மேல்முறையீடு செய்தது.
தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இந்நிலையில் 3 நீதிபதிகளில் அமிதவராய் வரும் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் கழித்து காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி இரு மாநிலங்களிலும் விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக