சனி, 10 பிப்ரவரி, 2018

சிறந்த சுகாதாரம் கேரளம் 1 ஆம், பஞ்சாப் 2 ஆவது, . தமிழகம் 3 இடத்திலும் உள்ளது

சுகாதார குறியீடு,பட்டியல்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,3ம் இடம்புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்பின் சுகாதார குறியீட்டு பட்டியலில், சிறந்த மாநிலங்களில், கேரளாவுக்கு முதலிடமும், தமிழகத்திற்கு மூன்றாமிடமும் கிடைத்துள்ளது மத்திய அரசுக்கு, திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை கூறும் அமைப்பான, நிடி ஆயோக், மாநிலங்களில் உள்ள சுகாதார >துறையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதில், கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டு, தமிழகம் மூன்று, குஜராத் மாநிலம் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.< மிகப் பெரிய மாநிலங்கள் வரிசையில் மோசமான சுகாதார சேவைகள் உள்ள மாநில வரிசையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் மற்றும் ஒடிசா இடம் பெற்றுள்ளன.


குறியீட்டின்படி, பெரிய மாநிலங்களில், ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை, ஆண்டுதோறும்
அதிகரித்து வரும் செயல்திறன் உடைய மூன்று மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. சிறிய மாநிலங்களை பொறுத்தவரை, மிசோரத்தை தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்கள் உள்ளன தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக