வியாழன், 11 ஜனவரி, 2018

திராவிட மலையை தகர்க்கும் வேலையை ஏஜெண்டுகள் மூலம் ....RSS ஆரம்பித்து பல ஆண்டுகள்....

Deepika Suhil  : 1.இட ஒதுக்கீட்டை ஒழிப்பது.
2.தேசம் முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டுவருவது.
3.ஒரே ஆட்சி மொழியாக இந்தியை கொண்டுவருவது.
4.மாநிலங்களை ஒடுக்கி சுயாட்சியை ஒழிப்பது.
5.எதிர் கட்சிகளை விழுங்கி ஒரே கட்சி ஆட்சியைக் கொண்டுவருவது.
6.இந்தியாவின் சமய சார்பற்ற தன்மையை மாற்றி இந்து நாடாக்குவது
போன்ற நீண்ட நாள் செயல் திட்டங்களை வகுத்து அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டுவருகிறது இந்துத்துவ அரசியல்.
இந்த திட்டத்தை பல மாநிலங்களில் செயல்படுத்தி வெற்றி பெற்று மக்கள் மனநிலையிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் தமிழகமும் கேரளமும் இன்னும் இவர்களுக்கு இன்னும் சவாலாகவே இருந்து வருகின்றன.
காலங்காலமாக சோ ராமசாமி போன்ற நிரந்தர ஏஜென்ட்கள் தமிழகத்தில் பலனளிக்காததால் வேறு ஒரு திட்டத்தை வகுத்தது காவிகளின் தலைமை.
அதுதான் டாஸ்க் ஃபோர்ஸ் மேனேஜ்மென்ட்.
இந்த டாஸ்க் படி ஒரு பெரிய திட்டம் சின்ன சின்ன டாஸ்க்குகளாக பிரிக்கப்பட்டு செயல் படுத்தப்படும்.
சில முக்கிய கட்சிகள் அரசியல் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை அணுகி இதை மட்டும் செய்யுங்கள் 2 கோடி தருகிறோம். இதை மட்டும் பேசுங்கள் 5 கோடி தருகிறோம் என ஆசை காட்டி தங்கள் திட்டத்தை மெல்ல மெல்ல தமிழகத்தில் சாதித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு திட்டம் புரிந்தாலும் பாதகமில்லை. காரணம் கொடுக்கப்படும் டாஸ்க் அவர்களுக்கே உதவுவது போல அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவது போல இருக்கும்.அதனால் அவர்கள் வளரவும் செய்வார்கள்.பணமும் கிடைக்கிறது செல்வாக்கும் கூடுகிறது என்றால் யாருக்கு கசக்கும்.
அப்படிப்பட்ட ஒரு டாஸ்க்கின் படிதான் சீமான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் திராவிடத் தலைவர்களை அருவருக்கத்தக்க வகையிலும் பேசிவருகிறார்
இந்த டாஸ்க் மேனேஜ்மென்ட்டில் பங்கெடுத்த தலைவர்களின் பட்டியலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளும் கீழே:
1.கிருஷ்ணசாமி (நீட் ஆதரவு, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு)
2.சீமான் (இடஒதுக்கீடு, திராவிட கட்சிகள் எதிர்ப்பு,தமிழ் உணர்வு ஓட்டு பிரிப்பு)
3.திருநாவுக்கரசர் ( திமுக கூட்டணியிலிருந்து சமயம்பார்த்து விலகுவது)
4.தமிழருவி மணியன் (ரஜினி ஆதரவு,திமுக மீது வசை )
5.வேல்முருகன் (தமிழ் உணர்வு ஜாதி உணர்வு பேச்சு)
6.திருமுருகன் (பஜாக எதிர்ப்பு,காங்கிரஸ் எதிர்ப்பு,தமிழ் உணர்வு பேச்சு)
7.அன்புமணி ராமதாஸ் (ஜாதி ஓட்டு,தமிழ் உணர்வு ஓட்டு பிரிப்பு)
8.விஜயகாந்த்(திமுக கூட்டணி புறக்கணிப்பு)
9.விஷால் (நாமினேஷன் ஆர்கே நகர்:மீனவர் உயிரழப்பின் மீது குவிந்த கவனத்தை திசை திருப்புதல்)
10.கமலஹாசன்(அதிமுகவை சசிகலா குடும்பத்தை திட்டிக் கொண்டே இருப்பது)
இன்னும் பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.அவர்கள் யாரென காலம் அடையாளம் காட்டும்.
சில ஊடகங்களும் இந்த டாஸ்க் ஃபோர்சில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த டாஸ்க்குகளில் காவிகளுக்கு வியத்தகு துல்லிய வெற்றி கண்டுவருகிறார்கள்.இதில் மிகப்பெரிய வெற்றி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றது.
பாஜகவின் இலக்கு எப்போதுமே அதிமுக அல்ல.. ஜெ மறைவுக்கு பின் தமிழகத்தை அவர்கள் தான் ஆளுகிறார்கள் என்பதை ராஜா,கல்யாணராமன் ஆகியோர் போடும் குதியாட்டத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
இன்றும் என்றும் அவர்களது ஒற்றை இலக்கு திமுகவை வீழ்த்துவது.பெரியாரை வீழ்த்துவது.
அதன்படி டாஸ்க் ஃபோர்ஸ் திமுகவின் ஒட்டு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வேலையில் முழுமூச்சாக இறக்கி விடப் பட்டிருக்கிறது.
கூடவே பாஜகவின் கொள்கைகள் திட்டங்கள் மசோதாக்களுக்கு பெரிய எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வது. ஏதாவது பிரச்சனை உருவாகும்போது கவனத்தை திசை திருப்புவது ஆகியனவும் இந்த டாஸ்க் ஃபோர்சின் வேலை.
நன்றாக சிந்தித்து பாருங்கள்.
திமுகவின் ஓட்டு வங்கி தமிழ் உணர்வாளர்கள்,ஈழ ஆதரவாளர்கள்,சமூக நீதி ஆர்வலர்கள்,பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்டவர்கள்,முஸ்லீம் மற்றும் கிருத்தவர்கள் ஆகியோரைக் கொண்டது.
இதில் தமிழ் உணர்வாளர்களையும் ஈழ ஆதரவாளர்களையும் கிட்டத்தட்ட வெளியேற்றிவிட்டார்கள்.
பிற்படுத்தப்பட்டவர்களின் ஒரு பகுதியினரை வெளியேற்றும் வேலையை அன்புமணியும் வேல்முருகனும் செவ்வனே செய்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லீம் ஓட்டுகளையும் கூட பிரித்துவிட்டார்கள்.
ஆக தொடர்ந்து இந்த ஆபரேஷன் கழகங்கள் இல்லாத தமிழகம் இலக்கை நோக்கி செவ்வனே நகர்ந்து வருகிறது.
சிறு உளிகளைப்போல் சில்லரை கட்சிகளையும் ஒன்றரையணா அரசியல் புள்ளிகளை வைத்தும் திராவிடம் எனும்  மலையைத்தகர்க்கும் பணி இந்த மண்ணில் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன.இடையில் ஜெ மரணம் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.
காற்று அவர்கள் பக்கம்தான் அடிக்கிறது.
காலம் அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
திமுக இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் மௌனமாக பார்த்து பார்த்து அடியெடுத்து வைக்கிறதோ எனத்தோன்றுகிறது.
இதை படித்துவிட்டு இப்படி கூட நடக்குமா என்பீர்கள்.
இலுமினாட்டி கதைகளையே நம்புகிறீர்கள்.
இதையும் கூட்டி கழிச்சு பாருங்கள்..!
உண்மை புரியும்.
Deepika Suhil
11/1/18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக