செவ்வாய், 23 ஜனவரி, 2018

India For Sale? மோடி : வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள்: உலக பொருளாதார மாநாட்டில் மோடி அழைப்பு

வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள்: உலக பொருளாதார மாநாட்டில் மோடி அழைப்புமாலைமலர் : வாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். #WorldEconomicForum #wef18 #Davos #Modi #NarendraModi டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது.
இந்த மாநாடு 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார்.
அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.


இன்று நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- உங்கள அனைவருடனும் இணந்து இந்த மாநாட்டில் பங்கேற்க இங்கு வந்துள்ளதை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்தமுறை 1997-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை எட்டி இருந்தது. தற்போது அது ஆறு மடங்காக உயர்ந்துள்ளது.

நமது வாழ்முறையை தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது. அரசியல் ஆகட்டும், பொருளாதாரம் ஆகட்டும், அனைத்திலுமே தொழில்நுட்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. இதில் உள்ள முறிவுகள், பிரிவினைகள் மற்றும் தடைகள் போன்றவை முன்னேற்றமின்மைக்கான அடையாளமாக காணப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, தகவல் தொகுப்பு என்பது மிகப்பெரிய சொத்தாக உள்ளது; உலகளாவிய அளவில் தகவல்கள் பாய்வது ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில் மிகப்பெரிய சவாலாகவும் விளங்கி வருகிறது.

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த உலகத்தால் நம்மை வளைக்கவும், உடைக்கவும் முடியும். பயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதத்தில் நல்லது தீயது என்று சிலர் கூறுவது அதைவிட மோசமானது. சில இளைஞர்கள் மதவாதத்தால் பயங்கரவாதத்தின் பக்கம் திசை திருப்பப்படுவதை பார்க்கையில் வேதனையாக உள்ளது.

பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் மனிதர்களின் சுயநல இயல்பு ஆகிய இவை மூன்றும் மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களாகும்.

இன்றைய மனிதர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் தவறான வகையில் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்த தவறான நடத்தையை பருவநிலை மாற்றம், பயங்கரவாத சவால்களுக்கு குறைவாக கணித்து மதிப்பிட இயலாது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரம் ஆகும். எங்கள் தேசப்பிதா மகாத்மா காந்தி சுரண்டல் மற்றும் பேராசைகளை எதிர்த்து வந்தார். ஆனால், பேராசையின் அடிப்படையிலான நுகர்வின் பக்கம் நாம் எப்படி திரும்பினோம்? நேர்மையான முறையில் நாம் ஒன்றாக கைகோர்த்து நடந்தால் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும். அனைவரையும் சேர்த்துகொண்டு முன்னேறுங்கள். அனைவருக்காகவும் முன்னேறுங்கள்.

இந்தியாவில் ஜனநாயகமும் நாட்டின் அமைப்பும் ஆற்றலும் ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி வருகின்றன, இதனால் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது சாத்தியப்படுகின்றது. நம்மைச் சுற்றி எல்லாமே மாறிவரும் காலகட்டத்தில் நாம் வாழும்போது கணிக்க முடியாத நிலையாமைக்கு இடையில் சர்வதேச கூட்டுறவின் அடிப்படை சட்டங்களை நாம் கடைபிடிக்க வேண்டியது அதிமுக்கியமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக