ஞாயிறு, 21 ஜனவரி, 2018

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் .... EVM இருக்கையில் யார் வந்தா என்ன?

மாலைமலர் :இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை நியமனம் செய்து சட்ட அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்: சட்ட அமைச்சகம் அறிவிப்பு" c புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் அச்சல் குமார் ஜோதி, விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை சட்ட அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்றதும், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் ஜனவரி 23-ம் தேதி பதவியேற்பார் என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளரான அச்சல் குமார் ஜோதி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ம்தேதி தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெறுவதால் உருவாகும் காலியிடத்திற்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொருளாதார துறை செயலாளர் அசோக் லவேசா தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 23-ம் தேதி பதவியேற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக