திங்கள், 8 ஜனவரி, 2018

தினகரனை வரவேற்ற திமுக எம் எல் ஏக்கள் .. சட்டசபை வளாகத்தில் ...

சட்டசபை வளாகத்தில் டி.டி.வி தினகரனுக்கு வாழ்த்து கூறிய தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்மாலைமலர் :தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இன்று டி.டி.வி தினகரன் வந்த நிலையில், சில தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினர். சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டசபைக்குள் செல்ல உள்ளார்.
இதற்காக, இன்று சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தினகரன் சிரித்துக்கொண்டே நன்றி கூறினார்.
சட்டப்பேரவையில் தினகரனுக்கு இருக்கை எண் 148 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2006-ம் ஆண்டு ஒற்றை
எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் அமர்ந்த இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் தினகரனை உள்ளே வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக