செவ்வாய், 23 ஜனவரி, 2018

கமல் விக்ரம் இணைந்த படம் பூஜைக்கு முன்பே விற்றது.... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ?

பூஜைக்கு முன்பே விற்பனையான கமல்-விக்ரம் படம்!மின்னம்பலம் : கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பூஜை தொடங்கும் முன்பே படத்தை வாங்கியிருக்கிறது முன்னனி நிறுவனம் ஒன்று.
கமலிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் எம். செல்வா தூங்காவனம் திரைப்படம் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். ப்ரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், நள தமயந்தி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. தற்போது கமல் தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

கமல்-விக்ரம் இணைந்துள்ள இந்தப் படத்தை பூஜைக்கு முன்னரே ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வாங்கியிருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்திற்காக 17 கோடி சம்பளம் வாங்கிய விக்ரம் இந்தப் படத்திற்காக 2 கோடியைத் தள்ளுபடி செய்து 15 கோடிக்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக