புதன், 17 ஜனவரி, 2018

பாஜக எம்பி நடிகர் சுரேஷ் கோபி கைது .. வரி ஏய்ப்பு ... பிணையில் விடுதலை

Chinniah Kasi : வரி ஏய்ப்பு மோசடி: பாஜக எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி கைது
மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர்,சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். ரூ. 20 லட்சம் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாக, நடிகை அமலா பால், பகத் பாசில் இருவரும் ஏற்கெனவே போலீசாரால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வரிசையில், பிரபல மலையாள நடிகரும், பாஜகஎம்.பி.யுமான சுரேஷ் கோபியும், வரி ஏய்ப்பு புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு- ரூ. 1 லட்சம் பிணைத்தொகையாகவும் மற்றும் இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக