வியாழன், 25 ஜனவரி, 2018

படிக்காத மாணவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!
மின்னம்பலம்: விழுப்புரத்தைச் சேர்ந்த காமராஜ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பழகும்விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் காலத்தில் படிப்பில் அக்கறை செலுத்தாத மாணவர்கள், பின்னாளில் அதற்காக வருத்தப்படுவார்கள் என்பதால் அவர்களுக்குப் படிப்பின் அவசியத்தை வலியுறுத்த தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு மண்டியிட்டு வேண்டுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் பாலு.
இவர் விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவரிடத்தில் நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறுவதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் வீடு தேடி வந்து படிப்பின் அவசியத்தை வலியுறுத்தவும் செய்கிறார். மேலும் மாணவர்கள் முன் மண்டியிட்டு அவர்கள் நன்றாகப் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.

பள்ளியின் தலைமை ஆசிரியரின் இந்தச் செயலால் அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் எண்ணம் ஏற்பட்டு விடுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் விதத்திலும் மாணவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக