ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கலைஞர் தொண்டர்களை சந்தித்தார் ..கோபாலபுரத்தில் குவிந்தனர்

Mathi - Oneindia Tamil சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி திமுக தொண்டர்களை அக்கட்சித் தலைவர் களைஞர்  இன்று சந்தித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். i முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கலைஞர் இன்று கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். கலைஞர்  சந்திக்கப் போகிறார் என்ற தகவல் பரவியதால் காலை முதலே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
கலைஞரின்  கோபாலபுரம் இல்லம் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதிக்கு வந்து தொண்டர்களுடன் பொங்கல் விழா வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக