செவ்வாய், 30 ஜனவரி, 2018

பாஜாகவுக்குள் பார்ப்பனர் பார்பனர் அல்லாதார் மோதல் ...... தமிழக எதிரொலியும் அதுதான்

Ganesh Babu: பி.ஜே.பியின் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து சற்றுமுன் கிடைத்த செய்தி:
பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக தொடங்கப்பட்ட பி.ஜே.பியை, மோடி-அமித் ஷா ஆகிய இரண்டு பார்ப்பனரல்லாத தலைவர்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக நினைத்து பதற்றத்தின் உச்சிக்கு சென்றதாம் ஆர்.எஸ்.எஸ் தலைமை.
அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்வந்த் சின்ஹா, குருமூர்த்தி, சு.சாமி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சார்பில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தப் பிறகுதான் பிரதமர் மோடிக்கு 'ஆர்.எஸ்.எஸ் தன்னை சந்தேகப்படுகிறது' என்ற விசயமே புரிந்ததாம்.
பயந்துப் பதறிய மோடியும், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனத் தலைமை முன் மண்டியிட்டு, 'நாங்கள் இருவரும் என்றென்றும் பிராமணர்களின் அடிமைகள். உங்களுக்கு நாங்கள் ஒருப்போதும் துரோகம் இழைக்கமாட்டோம்' என்று உருக்கமாகக் கதறியப் பிறகே இவர்கள் மீதான சந்தேகம் தீர்ந்து பெருமூச்சுவிட்டதாம் ஆர்.எஸ்.எஸ் தலைமை.
இந்நிலையில் தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வடிவில் மீண்டும் பி.ஜே.பிக்குள் 'பார்ப்பனரல்லாதார் பிரச்சனை' கிளம்பியிருக்கும் நிலையில், ஆரம்பத்தில் இதை ஏதோ சின்ன சலசலப்பு என்று நினைத்து அசட்டை செய்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனத் தலைமைப்பீடத்திற்கு, தற்போதுதான் இதன் வீரியம் புரியத்தொடங்கியுள்ளதாம். இதில் புதிய திருப்பம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் தலைமையால் பொன்னாரை தொடர்புக்கொள்ளவே முடியாவில்லையாம்.

காரணத்தை விசாரித்ததில், 'உமா பாரதி, ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவான், எடியூரப்பா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பி.ஜே.பியின் பார்ப்பனரல்லாத தலைவர்கள் பெரும்பாலானோர் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பேசி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதனால்தான், அவரது தொலைப்பேசி தற்போதைக்கு ஆர்.எஸ்.எஸின் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறது' என்பதை அறிந்து ஆடிப்போயிருக்கிறதாம் ஆர்.எஸ்.எஸ் தலைமைபீடம்.
'தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அவரது தொலைப்பேசி மட்டுமல்ல, அவரும்தான்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
"எத்தனையோ மாநிலங்களில் நுழைந்து 'இந்து-இந்து அல்லாதார்' என்று மக்களை எளிதாகப் பிளவுப்படுத்தி ஆட்சியில் கம்பீரமாக அமர்ந்த நாம், தமிழகத்திலும் அதையே செய்ய நினைத்து இப்போது 'பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார்' என்று நம் கட்சி பிளவுப்பட்டதுதான் மிச்சம். மீண்டும் பெரியார் நம்மை வீழ்த்திவிட்டாரே!" என்று புலம்புகிறார்களாம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பி.ஜே.பி சீனியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக