செவ்வாய், 30 ஜனவரி, 2018

இளையராஜா .. பாரதிராஜா ... வைரமுத்து ... அலசவேண்டிய கட்டாயம்


வாசுகி பாஸ்கர் :   ராஜா எந்த காரணத்திற்காக வாய்மூடி இருந்தாலும், அவர் வாய் திறந்தால் பாரதிராஜாவின் கதையும், வைரமுத்துவின் கதையும் சந்தி சிரித்து விடும். இந்த குற்றவுணர்வு இவ்விருவருக்குமே கூட உண்டு.
தாங்கள் சந்தித்த அடக்குமுறைகளை கூட வெளியே சொல்லாமல் தவிர்த்து விட்டு வேறு ஒன்றாக கலக்கும் தலித்துகள் இந்தியாவில் ஏராளம், அதில் ஒருவர் ராஜா.
ராஜா எதுவாக வேண்டுமானால் மாறட்டும், அதை சூத்திர சாதி வெறியர் பாரதிராஜா சொல்ல்லக்கூடாது என்கிறோம். ஏனினில் தலித்துகளை பொறுத்தவரை பார்ப்பனிய அடக்குமுறைக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இடைநிலை சாதிவெறி.
இளையராஜா குறித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை முற்போக்கு தளத்தில் இயங்குகிறவர்களும், தலித் அரசியல் பேசுகிறவர்களும் கூட கண்டும் காணாமல் இருந்தனர்.
அதன் முக்கிய காரணம், இளையராஜாவின் இசையை தாண்டி எஞ்சிய விவகாரங்களுக்கு தள்ளி நிற்பதே சிறந்தது என்கிற முன் முடிவினால் தான். அவரின் தனி விருப்பு வெறுப்பு குறித்து அக்கறைபட்டுக்கொள்ளும் தேவை நிச்சயம் இல்லை.

என்னளவில் ஒன்றை பேசினால் அதனால் யார், என்ன நினைப்பார்கள் குறித்து அக்கறை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.
நான் நிறைய இளையராஜாக்களை பார்த்திருக்கிறேன், அவர்களின் உளவியலையும் நான் அறிவேன். என் தந்தையே ஒரு இளையராஜா ரகம் தான்.
இளையராஜா தன்னை ஒரு தலித்தாக காட்டிக்கொண்டதில்லை, தலித் அரசியல் பேசுகிறவர்களும் அதற்காக அவரை தூக்கி பிடித்ததில்லை. அவர் தம்மை எப்படி உணர்ந்தாலும், அதனால் அவரின் மீதான மதிப்பீடுகள் எப்படியிருந்தாலும், இளையராஜாவையும் கவ்வும் அரசியலை நான் கவனிக்கத்தவறியதில்லை.
நேற்றைய பாரதிராஜாவின் கம்மன்ட் கூட அதிலொன்று, “இளையராஜா ஐயர் ஆக பார்க்கிறார்”
இளையராஜாவை நோக்கி இதை சொல்ல பாரதிராஜா என்னும் சாதி வெறியருக்கு நிச்சயம் எந்த தகுதியும் இல்லை என்பதே உண்மை. ஏனினில் இங்கே பார்ப்பனியத்தை உள்வாங்க முயற்சிப்பது என்பதே ஒரு உளவியல், அதற்கு பலியானவர்கள் ஏராளம். அதில் வெறும் இளையராஜாவை மட்டும் அடக்கி விட முடியாது, பிறப்பால் பார்ப்பனராக இல்லாமலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கை பிடித்தால் “கத்துண்டேன்” என்கிற சொல் பிரயோகத்துக்கு தாவுவது பார்ப்பனிய மனநிலை தான். ஒரு காலத்து சம்ஸ்கிருத பெயர்கள் சாத்தியமில்லா குப்பனின், சுப்பனின் தற்கால பேரப்பிள்ளைகள் லக்ஷ்யா, தஷ்விதா போன்ற பெயர்களில் மேட்டிமைத்தனம் குடியிருப்பதாக நினைப்பது பார்ப்பனிய உளவியல் தான். வீட்டில் ஆயா என்று அழைத்துவிட்டு பொதுவெளியில் “பாட்டி” என்று குறிப்பிடுவது பார்ப்பனிய உளவியல் தான். வீட்டில் சமைக்கப்படும் மாட்டுக்கறியை மறைத்து “எங்கள் வீட்டில் செய்ய மாட்டோம் அல்லது சாப்பிட்டுக் கொண்டே நான் சாப்பிட மாட்டேன்” என்று சொல்வது பார்ப்பனிய மனநிலை தான்.
இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பார்ப்பனிய வாழ்வியலுக்கு ஏங்கும் கூட்டம் இங்கே இருக்கத்தான் செய்கிறது.
இதில் தன்னை இளையராஜா தலித் என்று சொல்லிக்கொள்ளாததும், பாரதிராஜா சுயசாதி பெருமையை பீற்றுவதையும் எதை வைத்தும் சமன்படுத்த முடியாது.
பாரதிராஜாவை பறைசாற்ற வைத்த இதே சமூகம் இளையராஜாக்களை மறைக்க வைத்து நிர்பந்தித்ததை தவிர்த்து விட்டு பேசுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
ராஜா எந்த காரணத்திற்காக வாய்மூடி இருந்தாலும், அவர் வாய் திறந்தால் பாரதிராஜாவின் கதையும், வைரமுத்துவின் கதையும் சந்தி சிரித்து விடும். இந்த குற்றவுணர்வு இவ்விருவருக்குமே கூட உண்டு.
தாங்கள் சந்தித்த அடக்குமுறைகளை கூட வெளியே சொல்லாமல் தவிர்த்து விட்டு வேறு ஒன்றாக கலக்கும் தலித்துகள் இந்தியாவில் ஏராளம், அதில் ஒருவர் ராஜா.
ராஜா எதுவாக வேண்டுமானால் மாறட்டும், அதை சூத்திர சாதி வெறியர் பாரதிராஜா சொல்ல்லக்கூடாது என்கிறோம். ஏனினில் தலித்துகளை பொறுத்தவரை பார்ப்பனிய அடக்குமுறைக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இடைநிலை சாதிவெறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக