வெள்ளி, 19 ஜனவரி, 2018

சிறுமிகளின் வாழ்வை பாழடிக்கும் மத நிறுவனங்களின் லஞ்சத்தில் அரசியவாதிகள்

நித்தி ஆஸ்ரமத்தில் அந்த இளம் பெண்கள் மூடர்களாக , ஃபாஸிஸ்டுகளாக , இந்து மதத்தில் வலியுறுத்தாத ,இந்து வெறியர்களாக வளர்வதை சீரியஸான கட்டுரையில் பார்த்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு ஆச்சர்யமான ஒன்று.அவர்கள் அனைவரும் படு மகிழ்ச்சியாகவும் , ரிலாக்ஸாகவும் , தெனாவட்டாகவும் , தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.
இது இன்றைய நவீன தமிழ்ப்பெண்கள் இடையே காண்பதற்கு அரிது. இன்றைய நவீன தமிழ்ப் பெண்கள் காம்ப்ளெக்ஸாகவும் , இன் செக்யூர்டாகவும் ,ஸ்டிரெஸ் ஃபுல்லாகவும் , எதற்கெடுத்தாலும் உடைந்து போய் மூக்கை சிந்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த நித்தி ஆஸ்ரம பெண்களின் கேர்ஃப்ரீ ஆட்டிட்யூடை ஆராய வேண்டியுள்ளது.
இந்த உளவியலை புரிந்து கொள்ள  வேண்டும்.

Ganesh Babu : 'அந்தப் பெண் பொறுப்பில்லாமல் உளறியதையெல்லாம் இத்தனைப் பெரிதுப்படுத்தவேண்டுமா?' என்று முற்போக்கு நண்பர்கள் சிலரேக்கூட வருத்தப்படுகிறார்கள்.

நித்தியனந்திதா, 'தேடிச் சோறு தினம் தின்று' என்று பாடிய முரட்டு பாரதியார் ரசிகர், இன்னும் பல நித்யானந்தா பக்தர்கள் என்று நம் கவலை அவதூறாகப் பேசிய தனிநபர்களைப் பற்றியது அல்ல. ஆனால் இது ஏதோ தனிமனிதர்களின் பொறுப்பின்மையால் எதேச்சையாக நடந்தவை என்று நீங்கள் நம்பினால் ஏமாந்துப்போவீர்கள்.
ஒரு ஆய்வின் கருத்தை ஒருவர் மேற்கோள் காட்டுகிறார், அந்த விசயத்தை நாடுமுழுவதும் மதக்கலவரங்களை தூண்டுவதையே அரசியலாக செய்யும் இந்துத்வ பாசிஸ்ட்டுகள் கையிடுத்துக்கொள்கிறார்கள். நாட்டை ஆளும் ஒரு பி.ஜே.பியின் தேசிய செயலாளரான எச்ச.ராஜா அந்தக் கவிஞரை 'வேசிமகன்' என்று திரும்பத் திரும்ப பேசுவதோடு, 'அவன் தலையை வெட்டியிருக்கவேண்டாமா?' என்றெல்லாம் மக்களை தூண்டுகிறார். பி.ஜே.பியின் நயினார் நாகராஜன் "இந்துவிரோதிகள் கொலை செய்யப்படவேண்டும்" என்று பேசுகிறார், மற்ற காவி இயக்கங்கள் கவிஞரின் தலையை வெட்ட விலைப்பேசுகிறார்கள்.
இந்த சூழலில் பல்லாயிரம் கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களோடு நித்தியானந்தா தலைமையில் ஆன்மிக திருப்பணிகளை செய்வதாக இயங்கும் ஒரு மடத்தின் சீடர்கள் பலர், சொல்லிவைத்தாற்போல ஓரிரு நாட்களில் பி.ஜே.பியின் அதே காவி வன்ம/வக்கிரப் பேச்சுக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என்றால், அது மடாதிபதியான நித்திக்கு தெரியாமல் நடக்கும் என்று நினைக்கிறீர்களா?
வைரமுத்து கிருத்தவர் என்ற அயோக்கியத்தனமாக பிற மதங்களை எல்லாம் வம்பிழுப்பது மதக்கலவரங்களை தூண்டுவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி இல்லாமல் வேறென்ன? வடநாட்டில்தான் யோகி ஆதித்யனாத் போன்ற கொலைவெறி சாமியார்கள் கலவரங்களை செய்தே ஒரு மாநிலத்தின் முதல்வராக்கூட வரமுடியும். ஆதித்யனாத், ராம் ரஹீம், ஆசாராம் பாபு போன்ற காவி ரவுடி சாமியார்கள் அங்கு அரங்கேற்றும் வன்முறைகளுக்கு அடிப்படை இத்தகைய வெறுப்பை உமிழும் பேச்சுகள்தான்(hate speech) என்பதை மறக்காதீர்கள். தமிழகத்தில் இத்தனை வெளிப்படையாக நித்தியானந்தாவின் மடம் இதன செய்யத்தொடங்கியுள்ளது அசாதாரணமான சூழல்தானே?
வடநாட்டுக் காவி மதக்கலவரங்களின் பின்னணியையும், அதில் இதுப்போன்ற 'ஆன்மிக' மடாதிபதிகளின் பங்கையும் அறிந்தவர்கள் நிச்சயம் நித்தியானந்தா மடத்திற்கு எதிராகப் பேசவும், எழுதவும், போராடவும் தயங்கமாட்டார்கள், தயங்கவும்கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக