செவ்வாய், 9 ஜனவரி, 2018

குட்கா வழக்கில் .. ஜெயக்கொடி பணியிட மாற்றம் என்னன்னா பேரம் படிந்ததா> படியல்லையா ?

நக்கீரன் :குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட வி.கே. ஜெயக்கொடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஜெயக்கொடியை நில நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியாரேவை நியமித்தது தமிழக அரசு. தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள், காவல்துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டது. அதன்படி, குட்கா ஊழல் வழக்கை விசாரிக்க மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக