திங்கள், 8 ஜனவரி, 2018

உயர்கல்வியில் தமிழகம்தான் முதலிடம் ... திராவிடத்தின் நூற்றாண்டு சாதனை .... பொய் பிரசாரங்களை உடைத்தெறிந்த புள்ளி விபரம்

ராஜா ஜி  : உயர் கல்வியில் தமிழகம்தான் நாட்டிலேயே முதலிடமாமே
47% என்பது 1920 இல் நீதிக்கட்சி தொடங்கி வைத்த மாற்றம்.
இது இந்தியாவிலேயே முதல் முறையாக, ஏன் 2000 வருட வரலாற்றில் சூத்திரர்களுக்கு கல்விதந்த நூறாண்டு சாதனை!
இடையிடையே பார்ப்பனீயம் தலைதூக்கி 1937-இல் 3500 பள்ளிகளையும், 1952- இல் 6000 பள்ளிகளையும் மூடியபோது, அவர்களை ஓட ஓட விரட்டியடித்து மீண்டும் மீண்டும் பள்ளிகளை திறந்து பெற்ற சாதனை இது!
ஆம் ஈராயிரம் ஆண்டு வரலாற்றை புரட்டிப் போட்ட - திராவிட இயக்கத்தின் நூறாண்டு சாதனை இது.
கல்வி கற்றவன் எல்லாம் வரலாற்றையும் படித்தான் ,ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் இந்திய வரலாறே மாறிவிடும்.
அத்தனை புரட்சியையும் இங்கேதான் தொடங்கினோம். இந்தியர்கள் கல்வி கற்கவும் இங்கேதான் ஆரம்பம் ஆயிற்று.
நமக்கான கல்வி யாரிடமிருந்து கிடைத்தது?
யாரால் மறுக்கப்பட்டது என்பதையும் நினைவு கூர்வோம்.
கடந்து வந்த பாதையை மறந்தவன் வீடு திரும்ப முடியாது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன் நினைவோடு சங்கே முழங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக