புதன், 24 ஜனவரி, 2018

ஸ்டாலின் : தமிழ்தாய் வாழ்த்து பாடல் ..... தேசிய கீதம் பாடப்படும்போது தியானம் செய்யவில்லையா விஜேந்திரன் ?


மாலைமலர் : காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்தற்கு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பாடப்படும் போது விஜயேந்திரர் தியானம் செய்யவில்லையா?: மு.க ஸ்டாலின் 
சென்னை: சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி சங்கரமடத்தின் விஜயேந்திரர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால், விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் எழுந்து நின்றார்.


தேசிய கீதம் பாடப்படும் போது விஜயேந்திரர் தியானம் செய்யவில்லையா?: மு.க ஸ்டாலின் இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதுவும் ஆளுநருக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது கண்டனத்துக்குரியது. விஜயேந்திரர் தவறை மறைக்கவே தியானம் என தவறான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தாயை அவமானப்படுத்தியவதாகவே கருதப்படுகிறது. தியானம் நடத்துவது அவரவர் விருப்பம். ஆனால், தேசிய கீதம் பாடும்போது மட்டும் எழுந்து நின்றது எப்படி? என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகவாதி மதுரை ஆதினம் இது தொடர்பாக பேசுகையில், “எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கும் உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது.
இது சரியான முன்னுதாரணம் அல்ல.தமிழ்நாட்டில்தான் காஞ்சி சங்கரமடம் உள்ளது என்பதை விஜயேந்திரர் நினைவில் கொள்ள வேண்டும். இனி இவ்வாறு நடைபெறக்கூடாது என கருதுகிறோம்” என தெரிவித்தார். காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்தற்கு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக