வெள்ளி, 5 ஜனவரி, 2018

தமிழ்நாட்டில் முதன் முறையாக பீமா கோரிகாவ் போர் வெற்றி வீரவணக்க நாள்:

காட்டாறு : தமிழ்நாட்டில் முதன்முறையாக காட்டாறு குழு நடத்திய - வீரமும், விவேகமும் இணைந்த பீமா கோரிகாவ் போர்வெற்றியின் வீரவணக்கநாள்:
1818 ஜனவரி 1 ல், பார்ப்பன பேஷ்வா படைகளை வென்றது மகர்களின் தலைமையிலான திராவிடர் படை. மராட்டியக் களத்தில் தோற்று ஓடியவர்கள் இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் பிடித்துக்கொண்டார்கள். ஆனாலும், 600 க்கும் மேற்பட்ட பார்ப்பனர்களைப் பலிகொடுத்துத் தோற்ற, பீமாநதிக்கரைப் போராட்டம், இன்றும் பார்ப்பனக் கும்பலுக்குப் பெரும் அவமானமாகவே இருக்கிறது.
வெற்றியின் 200 வது ஆண்டிலும், அதே பார்ப்பன வன்மத்தோடு, 01.01.2018 லும் பீமா கோரிகாவ் வெற்றிச் சின்னத்தின் அருகே உறுதி ஏற்க வந்த மண்ணின் மைந்தர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

200 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, புனே அகில பாரத பிரமண மகாசபா ஆகிய பார்ப்பன ஆதிக்க அமைப்புகளுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்த பீமா கோரிகாவ் போராட்டத்தின் 200 வது வீரவணக்கநாள் - திராவிடர் பண்பாட்டு உறுதி ஏற்பு நிகழ்வு, 01.01.18 காலை 11 மணிக்கு
திருப்பூர் பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. காட்டாறு ஏட்டின் பதிப்பாளர், ஆசிரியர் பொள்ளாச்சி விஜயராகவன் தலைமையில், 130 தோழர்கள் பங்கேற்றனர்.
ஆதித்தமிழர்பேரவை, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட இயக்கத் தமிழர்பேரவை ஆகிய அமைப்புகளில் இருந்தும் 10 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். 1818 ல் திராவிடர் - ஆரியர் ஆயுதச் சமரில் வென்றோம்! இனி திராவிடர் பண்பாட்டுப் புரட்சியிலும் வெல்வோம்! #Bhimakoregaon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக