திங்கள், 22 ஜனவரி, 2018

கேரளா தொடரும் சாதி சுவர் ... இடிக்க போராடியவர்களை கைது செய்த பினராய் அரசு

2 Journos, 7 Dalits Arrested During ‘Caste Wall’ Protest in Kerala
நக்கீரன் :சாதிச்சுவரை இடிக்கக்கோரி போராட்டம் நடத்திய தலித்துகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிலாஷ் மற்றும் அனந்து ராஜகோபால் எர்ணாகுளம் பகுதியில் நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில் ஒரு சுவர் கட்டப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மத்தியில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த சுவர் தலித் மக்கள், அங்குள்ள கோவிலுக்கு செல்லாமல் இருப்பதற்காக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த சுவரை இடிக்கக்கோரி தலித் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு தலித் இளைஞர்கள் மற்றும் அந்தப் போராட்டத்தை படமெடுத்துக் கொண்டிருந்த இரண்டு பத்திரிகையாளர்களை கைது
செய்துள்ளனர்.பத்திரிகையாளர்கள் அனந்து ராஜகோபால் மற்றும் அபிலாஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலானது. அதன்மூலம், சாதிச்சுவரை இடிக்கக்கோரி ஒரு வருடமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக