ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பிகார் ராஜாவுக்கு ஆதரவாக பார்பன மாமிகள் வைரமுத்து படத்துக்கு செருப்படியாம்

Tamil Selvan : கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் சமூகநீதி, பகுத்தறிவு பேசப்பட்டு வருகிறது..ஆனால் அவைகள் தனிமனித விரோத அடிப்படையிலோ அல்லது வெறும் இன வெறி அடிப்படையிலோ பேசப்படவில்லை...பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றினணக்க வேண்டியே நீதிக்கட்சி ,சுயமரியாதை இயக்கம் தோன்றியது..செயல்பட்டது ..இப்போதும் அதன் தொடர்ச்சியான இயக்கங்கள் களத்திலிருக்கின்றன.
தந்தைபெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் மிக நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட வாழ்வில்...அரசியல் சித்தாந்த அடிப்படையில் கடும் எதிரிகள்..அவர்கள் இருவருமே தமிழக அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இந்திய அரசியலுக்கே ஒரு வாழிகாட்டியாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்..
திராவிடர் கழகமும் ,RSS இயக்கமும் நேர் எதிர் எதிர் சித்தாந்தம் கொண்டது..சில மாதங்கள் முன்பு தொழிலதிபர் விஜிபி அவர்களின் இல்ல விழாவில் தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் ..மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்..திக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யாவும், பாஜகவின் மூத்த தலைவர் உயர் திரு இல கணேசன் அவர்களும் அந்த மேடையில் அருகருகே இருந்தனர்..அப்போது உரையாற்றிய திக தலைவர் ஆசிரியர் இல கணேசன் அவர்களை தங்களின் கொள்கை எதிரி என்றும் தங்களுக்கும் அவருக்கும் சித்தாந்தங்களில்தான் முரண்பாடே தவிர தனிப்பட்ட வாழ்வில் எந்த விரோதமோ குரோதமோ கிடையாது என்று பேசினார்..


இந்து முன்னணி தலைவர் ராம .கோபாலன் அவர்கள் உடல்நலக்குறைவில் இருந்தபோது பூரண உடல் நலம் பெற வாழ்த்துத்தெரிவித்தவர்கள் திராவிடர் கழகத்தினர்..பெரியார் காலத்திலிருந்தே குன்றக்குடி அடிகளார் போன்ற சாமியார்களிடமும் நல்ல நட்புணர்வோடு பழகி வருபவர்கள் ..

கொள்கையில் தான் முரண்பாடேதவிர தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை..பிராமணர், சூத்திரர் என்று நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டால் ,பேதப்படுத்துவதை விட்டுவிட்டால் ஆரியர், திராவிடர் என்று நாங்களும் பேசுவது நின்றுவிடும்...

இவ்வளவு நாட்களாக சித்தாந்த அரசியலாக ,ஜனநாயக அரசியலாக இருப்பதை மோதல் அரசியலாக ,கலவர அரசியலாக மாற்ற ஒருவர் கிளம்பியிருக்கிறார் ..அவர் தான் எச் ராஜா ..

இந்த ஆசாமி கொள்கை கோட்பாடு அடிப்படையில் அரசியல் பேசுவதாகவே தெரியவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,பெரியார், திக பிரச்சார செயலர் அருள்மொழி.விசிக தலைவர் திருமா ,நாதக சீமான் ,கம்யூனிஸ்டுகள் என்று இவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்கள் இணையத்தில் வீடியோக்களாகவே உலவுகிறது..

எச் ராஜா அரசியலை தன் வக்கிரபத்தியை, சைக்கோதனத்திற்கான வடிகாலாகப்பயன் படுத்துகிறார் என்பது அக்காணொளிகளை காண்பவர்களுக்கு தெளிவாகவே புரியும்..இவரின் பேச்சை நம்பி இருதரப்பு மக்களும் மோதலில் ஈடுபடுவது ,போராட்டம் என்று தெருவில் இறங்குவது இருதரப்புக்குமே நல்லதல்ல..

எப்போதும் போல கருத்துமோதல், சித்தாந்த மோதல் செய்வோம்..விவாதிப்போம்..
விரும்பத்தகாத விளைவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது...சகட்டுக்கு கெட்டவார்த்தைகளை இறைக்கிற இந்த ஆசாமியின் பேச்சு அடிப்படையில் போராட்டத்தில் இறங்குவது வீண் விரோதத்தைத்தான் வளர்க்கும் ..காலங்காலமாக நாம் இங்கு தான் இருக்கிறோம் .இனிமேலும் இங்குதான் வாழப்போகிறோம்..
நமக்குள்ளான எந்த பிரச்சனைகளையும் ஜனநாயகமாக விவாதிப்போம்..ஆரோக்கியமான முறையில் அனுகுவோம்..

இனி எச் ராஜாவையும் அவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்களையும் மனநலமில்லாதவரின் பேச்சாக ஒதுக்கித்தள்ளுங்கள் இருதரப்புமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக