திங்கள், 29 ஜனவரி, 2018

தேவர், தேவேந்திர சாதி வாக்குகளை பிரித்து பாஜக ஆட்சி எச்ச.ராஜா, அமித் ஷா கும்பல்...

Shankar A : தமிழகத்தில் தாமரை மலரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
பிஜேபி தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வைத்திருந்த முக்கியமான திட்டங்களுள் ஒன்று, சாதி ரீதியாக தமிழகத்தில் கட்சிக்கு வலு சேர்ப்பது என்பது. அதன் ஒரு பகுதிதான், தென் மாவட்டங்களில் உள்ள தேவர் மற்றும் தேவேந்திரர் வாக்குகளை அள்ள, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது.
அமித் ஷாவின் அந்த திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக வருங்கால முதல்வர் எச்.ராஜா அவர்கள் பேசினார். இது ஒட்டுமொத்த முக்குலத்தோர் ் அந்நியப்படுத்தியுள்ளது என்பதை, தமிழக பிஜேபியில் உள்ள பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
சமுதாயத்தையும
இரு நாட்களுக்கு முன்னர், தமிழக பிஜேபியின் பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் கூடி, தமிழக பிஜேபி வளர்ச்சிக்கு எச்.ராஜா செய்து வரும் சேதாரத்தை ஆராய்ந்துள்ளனர். ஆண்டாள் சர்ச்சையை தேவையில்லாமல் பெரிது படுத்தியது, வைரமுத்துவை மிகவும் இழிவாக பேசியது, அதற்கு வருத்தம் தெரிவிக்காதது, ஜீயரை தூண்டி விட்டது உள்ளிட்ட எச்.ராஜாவின் நடவடிக்கைகளை விவாதித்துள்ளனர்.

கூட்டத்தின் முடிவில், எச்.ராஜாவின் நடவடிக்கைகள் விரிவாக பட்டியலிடப்பட்டு, அமித் ஷாவுக்கு புகாராக அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரின் நகல், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

அதன் பின்னரே பொன் ராதாகிருஷ்ணன், நானும் பச்சைத் தமிழன்தான், நானும் திராவிடன்தான். நான் திராவிடத்துக்கு எதிரானவன் கிடையாது என்று பேசினார்.
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு, எச்.ராஜாவை கடும் சினமடைய வைத்துள்ளது. இதன் வெளிப்பாடுதான், சிறிது நேரம் முன்பு, எச் ராஜா போட்ட ட்வீட்.
“மாண்புமிகு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்வைத்துள்ள கோஷம். கழகங்கள் இல்லா தமிழகம். ஆனால் நடத்துகின்ற விவாதம் திராவிடம் பற்றி. வீண் விவாதம் ஆரிய திராவிட இனவாத கட்டுக் கதைக்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று Dr. அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்“
தமிழக பிஜேபியில், பார்ப்பன தலைவர்கள், பார்ப்பனரல்லாதோர் என்ற மோதல் வெளிப்படையாக தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா இடையே இன்று வெளிப்படையாக தெரிய வந்துள்ள இந்த மோதல் வரும் நாட்களில் வெடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆண்டாள் விவகாரத்தில், தொடக்கத்தில் தீவிர ஆண்டாள் பக்தர் போல பேசிய மூக்குப் பொடி சித்தரின் பக்தர் டிடிவி தினகரன் கூட, முக்குலத்தோர் இடையே இருந்த கொந்தளிப்பை புரிந்து கொண்டு, ஜீயரை கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.ராஜா தன் வீர உரைகளை தொடர்ந்தால், தமிழகத்தில் பிஜேபி தனியாக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, அமித் ஷாவும் புரிந்து கொண்டு, எச்.ராஜா அவர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை கட்சியில் வழங்க உள்ளார் என்று பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். மலர்ந்தே தீரும்.
எச்.ராஜாவின் கரத்தை வலுப்படுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக