வியாழன், 4 ஜனவரி, 2018

கலைஞர் ரஜினி சந்திப்பு .. இம்புட்டும் பேசினாகளா...

சிவசங்கர் எஸ்.எஸ் : தலைவர் கலைஞர் முன் போய் நிற்கிறார் ரஜினி.
ரஜினி: அய்யா, வணக்கம்
கலைஞர்: வாய்யா, எப்படியிருக்க
ரஜினி: நல்லாருக்கேன் அய்யா. நீங்க எப்படி இருக்கீங்க ?
கலைஞர்: நான் நல்லாயிட்டேன்யா. ஆனா தமிழ்நாட்டு அரசியல் தான் மோசமாயிட்டு இருக்கு.
ரஜினி: அதத்தான் அய்யா, நானும் சொன்னேன், "சிஸ்டம் சரியில்ல" அப்படின்னு. எல்லாரும் கழுவி, கழுவி ஊத்தறாங்கய்யா
கலைஞர்: முதல்ல உன் சிஸ்டத்தை சிங்கப்பூர் போய் சரி பண்ணுய்யா
ரஜினி: அது இப்ப பரவால்லைங்கய்யா
கலைஞர்: வேற என்ன செய்தி?
ரஜினி: அரசியல்ல இறங்கல்லாம்னு இருக்கேன்ய்யா. உங்க ஆசிர்வாதம் வாங்கத் தான் வந்தேன்ய்யா
கலைஞர்: ராஜாதிராஜா படத்தில் ஓர் பாட்டு பாடினீயேய்யா
ரஜினி: ஆமாங்கய்யா.... 'ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம்"
கலைஞர்: அப்புறம் என்னய்யா ஆச்சி ?
ரஜினி: ஆமாங்கய்யா. இப்பவும் கட்சியும் இல்ல, கொடியும் இல்ல. ஆன்மீகம் தான்ய்யா
கலைஞர்: அதென்னய்யா ஆன்மிகம்?
ரஜினி: அது உண்மை, உழைப்பு, உயர்வுங்கய்யா
கலைஞர்: இது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமாச்சேய்யா?

ரஜினி: அவ், அப்டிங்களாய்யா... ஆன்மீகம்ன்னா மதம், சாதி இல்லா அரசியல்ய்யா
கலைஞர்: ஆன்மீகம்ன்னா சாமி கும்பிடறது தானேய்யா
ரஜினி: ஆமாங்கய்யா
கலைஞர்: இங்க தான் ஒவ்வொரு சாமியும் ஒரு மதம் சம்பந்தப்பட்டதா இருக்கே. அப்புறம் எப்படி மதம் இல்லா ஆன்மீகம்?
ரஜினி: மாப்பு, வக்கிறாரேய்யா ஆப்பு. அது வந்து, வேற அரசியல்ன்னு சொல்ல அப்புடி சொல்லிட்டேங்கய்யா
கலைஞர்: பதவி ஆசை இல்லன்னு சொல்றியேய்யா, அப்புறம் ஏன் அரசியலுக்கு வர்ற?
ரஜினி: சிஸ்டம் கிளீன் பண்ண தான்ய்யா
கலைஞர்: அப்ப பதவி யாருக்குய்யா
ரஜினி: ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையுமில்லை
கலைஞர்: அப்ப உங்க கட்சியில் சேர்றவங்க நிலைமை என்னய்யா
ரஜினி: கதம், கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சி
கலைஞர்: அப்ப எதுக்கு தான் அரசியலுக்கு வரணும்
ரஜினி: ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்
கலைஞர் : அது யாருய்யா ஆண்டவன்
ரஜினி: எச்சச்ச, கச்சச்ச. உட மாட்டேங்கறாரே. ஆள்றவங்கய்யா...., என்னை ஆள்றவங்கய்யா ( அப்பா)
கலைஞர்: அடுத்தவன் சொல்லி அரசியல் செய்யக்கூடாதுய்யா. நாமே தான் செய்யணும்
ரஜினி: என்னய்யா பண்றது... 1996ல் இருந்து நானும் வேணாம்ன்னு தான் தள்ளிப் பார்த்தேன். ஆனா விட மாட்டேங்கிறாங்கய்யா
கலைஞர்: சரிய்யா, அரசியல்ன்னு முடிவு பண்ணிட்டே . ஜாக்கிரதைய்யா இருய்யா
ரஜினி: அது தான்ய்யா பயமா இருக்கு. இந்தப் பத்திரிக்கைக்காரங்க வாயக் கிளறி ஏதாவது வாங்கிடுறாங்கய்யா
கலைஞர்: அதான்ய்யா அரசியல். கேமரா முன்னாடி வசனம் பேசறதில்ல. எந்த நொடியும் தயாரா இருக்கணும்
ரஜினி: இப்ப தான்ய்யா உங்கக் கஷ்டம் தெரியுது. ஆனா, அரசியலால இவ்வளவு கவரேஜ் கிடைக்குதேய்யா
கலைஞர்: உன் வசனத்தில் இருந்தே சொல்றேன்ய்யா. "கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது"
ரஜினி: அய்யோ ஆண்டவா. நீங்க கலைஞர் , நான் ரஜினி . வணக்கம், வர்றேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக