செவ்வாய், 16 ஜனவரி, 2018

பிரவீன் தொகாடியா: என்னை கொல்ல ராஜஸ்தான் போலீஸ் சதி

praveen_thogadiyaதினமணி: அகமதாபாத்: என்கவுண்டரில் தன்னைக் கொலை செய்ய ராஜஸ்தான் போலீசார் சதி செய்வதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டினைக் கூறியுளார். 
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக இருப்பவர் பிரவீன் தொகாடியா. இவர் மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில போலீசார் குஜராத் மாநில போலீசாருடன் திங்களன்று பிரவீன் தொகாடியாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரை அங்கே காணவில்லை. ஆனால் அன்று காலை 10:45 மணியளவில் அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் சென்ற அவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் போலீஸ் தொகாடியாவினைக் கைது செய்து விட்டதாக தகவல்கள் பரவத்  துவங்கின. ஆனால் அவரைக் கைது செய்யவில்லை என்று போலீஸ் மறுப்புத் தெரிவித்தது. அதே சமயம் அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனை ஒன்றில் செவ்வாயன்று காலை சுயநினைவற்ற நிலையில் பிரவின் தொகாடியா கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக