திங்கள், 29 ஜனவரி, 2018

பொன்.ராதாகிருஷ்ணன் : நானும் பச்சை திராவிடன்தான்.. திராவிடத்தை அழிக்கவேண்டும் என்று கூறவில்லை

Ganesh Babu : "திராவிடத்தை அழிக்கவேண்டும் என்றுக் கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான்"
-பி.ஜே.பி பொன்.ராதாகிருஷ்ணன்
மகிழ்ச்சி. வரவேற்கிறோம். தளபதி 'சொல்லவேண்டிய விதத்தில்' சொன்னவுடன் திராவிட இ
யக்கத்தின் மேன்மையை புரிந்துக்கொண்டார் என்றும் நம்புவோம். ஆனால், 'ஆரிய-திராவிட இனச் சிக்கல்' என்பதே வரலாற்று ஆய்வாளர் கால்டுவெல் போன்ற வெளிநாட்டவர்களின் சதி என்று சொல்லி 'திராவிடம்' என்கிற கோட்பாட்டையே நிராகரிக்கும் ஆரியப் பார்ப்பனீயக் கட்சியான பி.ஜே.பியில் இனி திராவிடப் பொன்னாருக்கு என்ன வேலை?
'தேசத்தைப் பிளவுப்படுத்தும் நோக்கத்தோடு தேசவிரோதிகளால் உருவாக்கப்பட்ட பொய்யான கற்பிதம்தான் திராவிடம்' என்று சொல்லி வரும் ஆரிய பி.ஜே.பிக்கு, 'பச்சை திராவிடன்' என்றுத் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட பொன்னாருடன் இனியும் ஏன் கள்ள உறவு?
'ஒருவர் என்னத்தையாவது உளறுவது, மற்றவர்கள் அதைக் கண்டுக்கொள்ளமல் இருப்பது' என்ற தங்களின் வழக்கமான பாணியில் பி.ஜே.பியும், பொன்னாரும் இந்த விசயத்தைக் கையாளமாட்டார்கள் என்று நம்புவோம்.

காரணம், பொன்னார் தெரிவித்துள்ள இக்கருத்து பி.ஜே.பியின் அடிப்படை ஆரிய பார்ப்பனக் கொள்கைக்கே முரணான ஒன்று. இதிலும் அவர்கள் சு.சாமி, எச்சை ராஜா, நிர்மலா சீதாராமன் என்று ஆளுக்கு ஒன்றை பேசவிட்டு மிக்சர் சாப்பிடுவதைப்போலக் கையாண்டால், ஏற்கனவே 'கணபதி அய்யர்' பேக்கரியைவிடக் கேவலமாக உள்ள பி.ஜே.பியின் கதை, பிறகு சொப்பன சுந்தரியின் காரைப் போல ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக