வெள்ளி, 19 ஜனவரி, 2018

பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு!

நக்கீரன் :முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை நிறுவ முழு ஆதரவளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் செயலாளர் திருமதி சூசன் ஃபெர்ரோ மற்றும் தேவாலய க்யூரேட்டர் ஷெரோன் பில்லிங் ஆகியோர் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். ;">அப்போது, “முல்லை பெரியாறு அணையை கட்டி தமிழக மக்களுக்கு பேருதவி செய்த இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் அவர்கள் மறைந்த பிறகு, அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி இங்கிலாந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேவாலய விதிமுறைகளின்படி, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அங்கிருந்து அகற்றப்படுவது வழக்கம்”, என்றும் தெரிவித்த அவர்கள், “அதன்படி, பென்னிகுவிக் கல்லறை அங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும், ஆனால், அவரது கல்லறையை அகற்றாமல் இருக்கவும், லண்டன் மாநகரம் மட்டுமல்லாது தேனியிலும் பென்னிகுவிக் திருவுருவச் சிலையை அமைக்க முயற்சித்து வருவதாகவும்”,தெரிவித்தனர்.


மேலும் அவர்கள், “தமிழக விவசாயிகளுக்கு தேவையான பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை கட்டி பெரும் தியாகம் புரிந்த பென்னிகுவிக் சிலையை நிறுவ, மு.க.ஸ்டாலின் ஆதரவளிக்க வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, திமுக தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றபோது, கடந்த 2000 ஆம் ஆண்டில், பென்னிகுவிக் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், மதுரையில் அவருக்கு திருவுருவச்சிலை நிறுவப்பட்ட விவரங்களை விரிவாக எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், லண்டனிலும், பென்னிகுவிக் சிலையை அமைப்பதற்கு திமுக சார்பிலும், கலைஞர் சார்பிலும், முழு ஆதரவினை அளிப்பதாகவும், அதற்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்தார். மேலும், கலைஞர் எழுதிய, ‘திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக பொருளாதாரப் புரட்சி’, என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக