புதன், 17 ஜனவரி, 2018

ரிபப்ளிக் டிவியை வெளியேற்றிய ஜிக்னேஷ் மேவானி .. எது பத்திரிக்கை சுதந்திரம் ?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீதும் ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார். காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரும், ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார். சசி தரூரும் வெளியேறச் சொன்னார். இவர்களுக்கெல்லாம் ரிபப்ளிக் டிவியோடு பெரும் தகராறு இருக்கிறதா என்ன ? ரிபப்ளிக் டிவியின் விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒருவரும் பங்கேற்பதில்லை. அர்னப் கோஸ்வாமிக்கு பேட்டியளிப்பதில்லை. ஏறக்குறைய தலைநகர் டெல்லியில் இந்த தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
by Savukku" : இன்று காலை, சென்னை லயோலா கல்லூரி எதிரே அமைந்துள்ள காயிதே மில்லத், ஊடக பயிற்சி மையத்தின் வளாகத்துக்குள், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.   இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிக்கையாளர்கள், பேட்டியளிக்குமாறு மேவானியை கேட்டுக் கொண்டனர்.
பேட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜிக்னேஷ் மேவானி, ரிபக்ளிக் டிவியின் மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று கூறினார்.   உடன் இருந்த பத்திரிக்கையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஜிக்னேஷ் தீர்மானமாக, ரிபக்ளிக் டிவி மைக்கை எடுக்காவிட்டால் பேட்டியளிக்க முடியாது என்றார்.   மைக்கை எடுக்க முடியாது.  உங்கள் பேட்டியை புறக்கணிக்கிறோம் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.  
மேவானியும் கிளம்பிச் சென்று விட்டார்.   இந்த சம்பவம் சர்ச்சையை உருவாக்கியது.  ட்விட்டரில் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது.
மேவானிக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.  பத்திரிக்கையாளர்களை அவமதித்து விட்டார் என்றும் குரல்கள் எழுந்தன.  வழக்கம் போல,  மோடி பக்தர்கள், மேவானியை தீவிரவாதி, நாட்டை துண்டாட நினைக்கும் பயங்கரவாதி என்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இணைய இதழ்களான, நியூஸ் மினிட், க்வின்ட் மற்றும் ஸ்க்ரோல் ஆகியவற்றில் இது குறித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன.    இந்த அளவுக்கு இது செய்தியானதால், அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டவன் என்ற முறையில் எனது கருத்தையும் பதிவு செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
பத்திரிக்கையாளர்கள் தரப்பு நியாயம் என்னவென்றால், மேவானி ரிபப்ளிக் டிவியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம். ஆனால் ரிபப்ளிக் டிவி மைக்கை எடுக்கச் சொல்ல உரிமை இல்லை என்று சொல்கிறார்கள்.   இன்று ரிபப்ளிக் டிவிக்கு நடந்தது நாளை வேறு எந்த ஊடகத்துக்கும் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.
வேறு ஊடகத்துக்கும் இது நடக்குமா என்றால் நடக்கும்.  ஊடகம் ஊடகமாக இருக்கும் வரை இது நடக்காது.  ஆளுங்கட்சியின் கூலிப்படையாக செயல்பட்டால் இது நடக்கவே செய்யும்.
ரிபப்ளிக் டிவிக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் சொத்துத் தகராறா ?  இல்லை.  பரம்பரை பகையா ?  இல்லை.  கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா ? இல்லை.  பின்னர் ஏன் ரிபப்ளிக் டிவியின் மைக்கை அகற்றச் சொல்கிறார் மேவானி ?
இதை மேவானி மட்டும் செய்யவில்லை.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீதும் ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார்.   காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரும், ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொன்னார்.   சசி தரூரும் வெளியேறச் சொன்னார்.  இவர்களுக்கெல்லாம் ரிபப்ளிக் டிவியோடு பெரும் தகராறு இருக்கிறதா என்ன ?
ரிபப்ளிக் டிவியின் விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒருவரும் பங்கேற்பதில்லை.  அர்னப் கோஸ்வாமிக்கு பேட்டியளிப்பதில்லை.  ஏறக்குறைய தலைநகர் டெல்லியில் இந்த தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ?  இப்படி ரிபப்ளிக் டிவி மீது வெறுப்பை கக்குபவர்கள் ஏன் இதர சேனல்களை இப்படி ஒதுக்குவதில்லை ?
பொதுவாழ்வில் இருப்பவர்கள் அனைத்து வகையான விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.  குறிப்பாக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.  அவற்றையும் தாங்கிக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.  மேலே குறிப்பிட்டவர்கள், இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள இயலாதவர்கள் அல்ல.
ஒருவரின் கொள்கைகளையோ, அவரது அரசியலையோ, அவரது நடவடிக்கைகளையோ விமர்சிப்பது என்பது வேறு.  ஆனால், ஒருவர் மீது வன்மைத்தை மட்டுமே கக்குவது என்பது வேறு.  அதை விமர்சனமாக பார்க்கவே முடியாது.   அது வெறும் விஷம்.
ரிபப்ளிக் டிவியில் முதலீடு செய்துள்ளவர் யார் ?  அதை நடத்தும் தலைமைச் செயல் அதிகாரி அர்நப் கோஸ்வாமியின் பின்புலம் என்ன என்பதை அறிந்தவர்களுக்கு இது வியப்பை தராது.  பிஜேபி கூட்டணியின் கேரள கன்வீனராக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்ராஜீவ் சந்திரசேகரின் முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான்.  முதலீடு செய்த பிஜேபி சார்பு  எம்பிக்கு விசுசாசமாக, 24 மணி நேரமும், மோடியின் புகழ் பாடுவதும், அதை விட முக்கியமாக, மோடியை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகளாகவும், சமுதாய விரோதிகளாகவும் சித்தரிப்பதை தனது முழுநேர பணியாக செய்து வருகிறது ரிபப்ளிக் டிவி.
இப்படி பச்சையாக, மோடி எதிர்ப்பாளர்களை மட்டுமே விமர்சிப்பது குறித்து அர்நப் கோஸ்வாமிக்கோ, ரிபப்ளிக் டிவி நிர்வாகத்துக்கோ எவ்விதமான அசூயையும் இல்லை.  மோடியின் புகழைப் பாடுவது மட்டுமே எங்கள் வேலை என்பதை ஏறக்குறைய அறிவிக்காத வகையில் செயல்பட்டு வருகிறது.
ஜிக்னேஷ் மேவானி அரசியலில் இறங்கியது முதலே, அவரை இழிவுபடுத்தி அவரைப் பற்றி மோசமான செய்திகளை வெளியிடுவதை முழுநேர வேலையாக வைத்திருக்கிறது ரிபப்ளிக் டிவி.  இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மட்டும், ஜிக்னேஷ் மேவானி குறித்து ரிப்பப்ளிக் டிவி வெளியிட்ட தலைப்புச் செய்திகள்….

Jignesh Mevani’s ‘Yuva Hunkar Rally’ Turns Out To Be A Flop Show

 After Mevani-Cong Link Exposé, Mevani Turns Violent

 Alpesh Thakor Says Jignesh Mevani Should Control His Language; Takes Him On Over ‘street War’ Speech

 Massive Protests Break Out In Mumbai After Police Cancels Jignesh Mevani’s Event

 Video Captures Jignesh Mevani Demanding A ‘street War’ To Settle Caste Disputes

இது போன்ற தலைப்புச் செய்திகளை போடுவதற்கு ரிபப்ளிக் டிவிக்கு உரிமை உள்ளதா என்றால் நிச்சயம் உள்ளது.  ஆனால் கடந்த ஒரு வாரத்தில், மேவானி சம்பந்தப்பட்ட வேறு செய்திகளே இல்லையா ?  மேவானி, டெல்லி பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அதில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அவர் சந்திப்பை பெரும்பாலான ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.   மறுநாள் அச்சு ஊடகங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததே காங்கிரஸ் கட்சி என்றும், அதற்கு பணம் செலுத்தியது ராகுல் காந்தியின் உதவியாளர் என்றும் செய்தி வெளியிட்டது ரிபப்ளிக்.  அந்த செய்தி முழுமையான பொய் என்பதை, அல்ட்நியூஸ் இணையதளம் அம்பலப்படுத்தியது.  இணைப்பு.
இப்படி வன்மத்தோடு பொய்ச் செய்திகளை வெளியிடும் ஒரு ஊடகத்துக்கு ஜிக்னேஷ் மேவானி எதற்காக பேட்டியளிக்க வேண்டும் ?  ரிப்பப்ளிக் டிவியின் மைக்கை அகற்றுங்கள் என்று அவர் சொன்னதில் என்ன தவறு ?
பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், தன்னைப் பற்றி வன்மத்தோடு பொய்ச் செய்தியை வெளியிடும் ஒரு தொலைக்காட்சி சேனலின் மைக்கை அகற்றுங்கள் என்று சொல்வதற்கு மேவானிக்கும் இருக்கிறதுதானே ?
கூடங்குள அணு உலை போராளி எஸ்பி.உதயக்குமார் வீட்டுக்கு ஒரு பத்திரிக்கையாளரை அனுப்பி, அவருக்கு தெரியாமல் ரகசிய கேமராவை வைத்து, அவர் வீட்டிலேயே உணவருந்தி, அவர் குடும்பத்தினரோடு உரையாடி, அப்போது அவர் பேசிய ஓரிரு வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு, கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் மிஷனரிகள் என்று செய்தி போடுவதற்கு பெயர் ஊடகமா ? கூலிப்படையா ?
அக்டோபர் மூன்றாவது வாரம் முதல், குஜராத் தேர்தல் பரபரப்பு ஊடகங்களையும் தொற்றிக் கொண்டது.  அந்த நாள் முதல், ரிபப்ளிக் டிவி, தேர்தல் கவரேஜ் தொடர்பாக உருவாக்கி தொலைக்காட்சியில் வெளியிட்ட ஹேஷ் டேகுகளை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக