ஞாயிறு, 28 ஜனவரி, 2018

விஜய் சேதுபதி : காஞ்சி விஜேந்திரருக்கு நாகரீகம் தெரியவில்லை

விஜய் சேதுபதி கருத்துவிஜயேந்திரர் அவமதிப்புtamiloneindia - Vignesh Selvaraj : திருச்சி : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்திய விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சங்கர மட விஜயேந்திரர் குறித்த இந்த சர்ச்சை பற்றி சில அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
< தமிழ்த்தாய் வாழ்த்து< கடந்த 23-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
 விஜயேந்திரர் அவமதிப்புt; இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர்,நெட்டிசன்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி கருத்து

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது பேசியுள்ளார். திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

நாகரிகம் தெரியவில்லை அதில் மத்திய அரசின் கண்டுகொள்ளாத்தன்மை குறித்தும் பேசினார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்துப் பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக