வியாழன், 18 ஜனவரி, 2018

ஆதார் .. உலக / உள்நாட்டு மாபியாக்கள் உங்களை கொள்ளையடிக்க ஒரு வரப்பிரசாதம்

ஆதார் மனித உரிமைகளைக் கொன்றுவிடுகிறது!
மின்னம்பலம் :ஆதார் மனித உரிமைகளைக் கொன்றுவிடுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷாம் திவான் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்கப் பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், அரசின் நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
ஆதார் அடையாள அட்டைக்கு ஒருவரின் கைரேகைப் பதிவு, கண்பார்வை படம் ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்படுகிறது. இந்தத் தகவல்கள் இணையத்தில் வெளியானால் ஒருவரின் தனிநபர் உரிமை மீறப்படும் என்று கூறப்பட்டது
இவ்வாறு ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி விசாரணையின்போது, ஆதார் இணைப்பு தொடர்பாக இடைக்கால உத்தரவை அரசியல் சாசன அமர்வு பிறப்பித்தது. மேலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியிருப்பதை ஏற்ற உச்ச நீதிமன்றம் அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதாரைக் கட்டாயமாகக் கேட்கக் கூடாது. மக்கள் விரும்பினால் இணைத்துக்கொள்ளலாமே தவிர, அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாம் திவான், “ஆதார் திட்டத்துக்காக தனிமனிதர்களின் அடையாளங்கள் எடுக்கப்படுவது தவறானது. அது மட்டுமின்றி ஆதார் மனித உரிமைகளைக் கொன்றுவிடுகிறது” என்று விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக