சனி, 13 ஜனவரி, 2018

எச்.ராஜா .. பார்பனீயம் ... வைரமுத்துவை அவரின் மக்களை கொண்டே.... காலம் காலமாக இந்த சதிதானே? ..

Ganesh Babu :  பார்ப்பனீயத்திற்கு எப்போதும் ஒரு இயல்பு உண்டு. தனக்கு ஒருவர் பகை இலக்கு என்றால், அவரை பெரும்பான்மை மக்களுக்கும் பகை இலக்காக முன்னிறுத்துவது.
அண்ணல் அம்பேத்கர் முதல் தற்போது கவிஞர் வைரமுத்து வரை அதுதான் நிலை.
பலநூற்றாண்டுகளாக 'இறைத் தொண்டு' என்றப் பெயரில் நம் வீட்டுப் பெண்களை எல்லாம் தேவதாசிகளாக ஆக்கிவைத்திருந்த பார்ப்பனர்களுக்கு இன்று கவிஞர் வைரமுத்து மீது தாளமுடியாதக் கோபமாம். தங்கள் சமூகத்தில் பிறந்ததாக நம்பப்படும் ஆண்டாள் 'தேவதாசியாக இருக்கலாம்' என்று ஒரு ஆய்வின் கருத்தை வைரமுத்து மேற்கோள் காட்டியதுதான் பார்ப்பனர்களின் கோபத்திற்குக் காரணமாம். எங்கே போய் முட்டிக்கொள்வது!
அதுவும் எச்.ராஜாவைப் போன்ற hardcore பார்ப்பனர், 'அவன் தலையை வெட்டியிருக்கவேண்டாமா? கைக்கால்களை உடைத்திருக்கவேண்டாமா?' என்று பார்ப்பனரல்லாத மக்களைத் தூண்டிவிடுகிறார்.

பார்ப்பனரல்லாதவர்களை வைத்து தங்கள் பகையை தீர்க்கும் இந்த வேலையைத்தான் அவர்கள் காலம் காலமாக செய்துவருகிறார்கள். அடிப்பதுதான் நம் கை, அடிக்கச் சொல்வது அவன் மூளை. எல்லாவற்றையும் செய்துவிட்டு, எஸ்.வி.சேகர் போன்ற softcore பார்ப்பனர்களை வைத்த், 'எங்களைவிட அமைதியான சமூகத்தினர் யாராவது உண்டா? இதுவரை எங்கள் சமூகம் வன்முறையில் ஈடுபட்டதுண்டா?' என்றும் அவர்களால் பேசமுடியும்.
இதுமட்டுமில்லை சமூகநீதி இட-ஒதுக்கீட்டு உரிமைகளால் பார்ப்பன ஆதிக்கம் பாதிக்கப்படுவதில் அவர்களுக்கு உள்ள கடுங்ககோபம் நாம் அறிந்த ஒன்றுதான். அதை பார்ப்பனீயம் எதிர்கொள்ளும் விதமே அலாதியானது.
சினிமா போன்ற பொது ஊடகத்தில் இட-ஒதுக்கீட்டைப் பற்றி இழிவான கருத்துக்களை அயோக்கியத்தனமாக பரப்புவதும், அந்த உரிமையை அனுபவிக்கும் மக்களிடமே சென்று அது ஏதோ தேவையற்ற சலுகை என்ற உணர்வை ஏற்படுத்தி கிருஷ்ணசாமிகளை உருவாக்குவது. மறுப்புறம் இட-ஒதுக்கீட்டால் மிகக்கூடுதலாக பயனடையும் இடைநிலைசாதியினரிடமே சென்று, இது ஏதோ ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே அனுபவிக்கும் ஏகபோக உரிமையைப்போல பொய் பிரச்சாரம் செய்வார்கள். அந்த முட்டாள்களும் அதை நம்பித்தொலைப்பார்கள்.
இதன் விளைவாகத்தான் தற்போது பல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த அரைவேக்காடுகளே இட-ஒதுக்கீட்டிற்கு எதிராக களமாடுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் நாம் சாதிவெறியர்களால் அண்ணல் அம்பேத்கர் சிலை மீதான தாக்குதல்களைப் புரிந்துக்கொள்ளவேண்டும். பார்ப்பனீயத்தை எதிர்த்து சமூகநீதி இட-ஒதுக்கீட்டிற்கான சட்ட உரிமைகளை வாங்கிக்கொடுத்தற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாருக்காவது நன்றியுணர்வோடு இருக்கவேண்டுமானால் அது அண்ணல் அம்பேத்கருக்கும், தந்தைப் பெரியாருக்கும்தான்.
அந்த அம்பேத்கரின் சிலையை சாதிவெறி அயோக்கியர்கள் உடைக்கிறார்கள் என்றால், அவர்கள் பார்ப்பனீயத்தின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள் என்றுதான் பொருள். உடைப்பது உன் கை, உடைக்கச் சொல்வது அவன் மூளை.
உன் உரிமைக்காவும் சேர்த்து போராடிய ஒரு மாபெரும் தலைவரின் சிலையை உன்னை வைத்தே உடைக்கவைப்பதுதான் பார்ப்பனீயம். இப்போது இப்பதிவின் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்!
-Ganesh Babu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக