திங்கள், 15 ஜனவரி, 2018

ஓசூரில் உணவு விடுதியாளர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

tamilthehindu :ஹோசூரில் உணவகம் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஓசூர் சமத்துவ புரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு(எ)பிரேம் நவாஸ்(40). இவர் ஹோசூர் ராம்நகரில் தாஜ் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை தன் வீட்டிலிருந்து உணவகத்துக்கு புறப்படும் போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.
இது குறித்து சேட்டுவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹோசூரை அடுத்த நல்லஹான கொத்தனபள்ளி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சூளகிரி போலீஸார் அங்குச்சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தலைத்துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தது நேற்றுக்காலை காரில் கடத்தப்பட்ட சேட்டு என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹோசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது. காரில் சேட்டுவை கடத்திய கும்பல் அவரை தனியிடத்துக்கு கொண்டுச்சென்று காலை வெட்டி பின்னர் அவரது கைகளை கட்டி தலையை தனியாக துண்டித்து கொன்றுவிட்டு தலையை அவரது காலடியில் வீசிவிட்டு சென்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட சேட்டு 2008-ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொலை வழக்கிலும், ராமநகர் இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலை வழக்கிலும் குற்றவாளிகளில் ஒருவர் என்று கூறப்படுவதால் முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக