புதன், 24 ஜனவரி, 2018

ராகுல் :இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க வேண்டும்

இந்தியாவின் 73% சொத்துக்கள் 1 சததவீதத்தினரின் கைகளில் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் ஊதிய சமநிலை, சொத்துகள் உள்ளிட்ட காரணிகளை மையமாகக் கொண்டு ஆக்ஸ்போம் எனும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2017ஆம் ஆண்டிற்கான இந்த ஆய்வை வெளியிட்ட ஆக்ஸ்போம், இதுகுறித்து பல தகவல்களையும் வெளியிட்டது.அதாவது, இந்திய மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதத்தினரிடம், நாட்டின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பில் 73 சதவீதம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

இதனால், ஆக்ஸ்போம் நிறுவன ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் டவிட்டர் பதிவில்,  அன்புள்ள பிரதமருக்கு, சுவிச்சர்லாந்துக்கு வரவேற்கிறேன். தயவுசெய்து ஏன் இந்தியாவின் 73 சதவிகித சொத்து ஒரு சதவீகிதத்தினர் கைகளில் உள்ளது என்று டாவோஸ் நகரில் கூறுங்கள்” என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக