சனி, 13 ஜனவரி, 2018

ஆ ராசாவின் 2 G புத்தகத்தால் அலறும் காங்கிரஸ்... பாஜக.. 10 முக்கிய குற்ற சாட்டுகள்



Veera Kumar POneindia Tamil அரசை காப்பாற்ற என்னை சிறையில் தள்ளினார்கள்.. ஆ.ராசா. புத்தகத்தில் பகீர் குற்றச்சாட்டு- வீடியோ சென்னை: 2ஜி வழக்கில் என்ன நடந்தது என்பதை 15 மாதங்கள் சிறையில் இருந்த போது ஆ. ராசா புத்தகமாக எழுதினார்.
"2G Saga Unfolds" என்கிற தலைப்பிலான இப்புத்தகம் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு வெளிவராத தகவல்களை ராசா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தகத்தில் உள்ள 10 முக்கிய அம்சங்கள் இவைதான்:
உங்கள் முயற்சியில் எந்த தவறும் இல்லை என்று மன்மோகன்சிங் தெரிவித்தார்.
உங்கள் அனைத்து நடவடிக்கையும் சட்டப்படி நியாயப்படுத்தத்தக்கது என்று மன்மோகன்சிங் கூறியிருந்தார்.
மன்மோகன்சிங் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது, தடுக்காதது மட்டுமல்ல, ஆதரவாகவும் இருந்தார்.
தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக, மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அமைதி காத்தது.
தலைமை கணக்கு தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராயால், அந்த அமைப்பின் நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டது.
 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாய்க்க வினோத் ராய் சிப்பாயாக செயல்பட்டார்.

அவர்தான் துப்பாக்கி ஏந்தினார். மொத்த வழக்குமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் எனக்கு எதிரான வாளாக சிபிஐயால் மாற்றப்பட்டது.
அரசின் இமேஜை காப்பாற்றிக்கொள்ள என்னை சிறை கம்பிகளின் பின்னால் தள்ளிவிட்டார்கள்.
 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிறைய சீனியர் வழக்கறிஞர்கள் இருந்தும், ஏன் உண்மையை வெளிக்கொண்டுவர அக்கறைப்படவில்லை என்பது வியப்பு
 2ஜி வழக்கை அரசு நடத்திய விதம் நியாயத்திற்கு மாறானது. இவ்வாறு அந்த புத்தகத்தில் சாட்டையடி தகவல்கள் இடம் பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக